'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தற்போது தயாரிப்பாளர், இயக்குனர், பாடலாசிரியர் என பன்முகத் தன்மையை வெளிப்படுத்த தொடங்கி இருக்கிறார். கடந்த ஆண்டு ஏ.ஆர்.ரஹ்மான் 99 சாங்ஸ் என்ற படத்தை தயாரித்தார். விரைவில் படம் இயக்கப்போவதாக அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் முழுநீள திரைப்படம் இயக்குவதற்கு முன்னோட்டடாக லீ மாஸ்க் என்ற 36 நிமிட குறும்படத்தை இயக்கி உள்ளார். இதில் ஹாலிவுட் நடிகர்கள் ஜெனிபர் கான்னெல்ஸி, மற்றும் நோரா அர்னெடர் நடித்துள்ளனர். இந்த படம் கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட இருக்கிறது.
ஏ.ஆர்.ரஹ்மான் கூறியிருப்பதாவது: இது எனது நீண்ட நாள் கனவு, எனது மனைவி சாய்ரா சொன்ன ஒன் லைனில் இருந்து இந்த படத்திற்கான உருவாக்கம் தொடங்கியது. உலகம் முழுவதும் உள்ள கலைஞர்களின் பங்களிப்பு இதில் உள்ளது. இசையும், வாசனையும் கலந்த ஒரு புதிய அனுபவத்தை தரும் படமாக இது உருவாகி இருக்கிறது. என்றார்.