'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
இந்திய அளவில் ரூ.100 கோடி வசூலித்த படங்கள்தான் அதிகம். ஆனால், 500 கோடி வசூலைக் கடந்த படங்கள் ஒரு சில மட்டும்தான். 100 ஆண்டு கால இந்தியத் திரையுலக வரலாற்றில் இதுவரையிலும் 'பாகுபலி 2, கேஜிஎப் 2, ஆர்ஆர்ஆர், 2.0, பாகுபலி, டங்கல்' ஆகிய படங்கள் மட்டுமே ரூ.500 கோடி வசூலைக் கடந்துள்ளன. அவற்றில் 'பாகுபலி 2, கேஜிஎப் 2' படங்கள் ரூ.1000 கோடி வசூலைக் கடந்துள்ளன.
ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா நடித்து 2018ல் வெளிவந்த 'பாகுபலி 2' படம் இந்திய அளவில் ரூ.1050 கோடி ரூபாயையும், வெளிநாடுகளில் 350 கோடி ரூபாயையும் வசூலித்து 1400 கோடியை மொத்தமாக வசூலித்திருந்தது.
இந்திய அளவில் 500 கோடியைக் கடந்து 1000 கோடியையும் தாண்டியுள்ள இரண்டாவது படமாக 'கேஜிஎப் 2' படம் இடம் பிடித்துள்ளது. இப்படம் இந்தியாவில் 1000 கோடி வசூலையும் வெளிநாடுகளில் 200 கோடி வசூலையும் பெற்றுள்ளது. 'பாகுபலி 2' படத்தின் இந்திய வசூல் சாதனையான 1050 கோடியை முறியடிக்க இன்னும் 50 கோடிதான் தேவை. அதையும் இப்படம் முறியடித்து முதலிடத்திற்கு முன்னேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.