ஹீரோ ஆனார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் | ‛சக்தி திருமகன்' முதல் ‛ஓஜி' வரை : இந்த வார ஓடிடி ஸ்பெஷல்....! | 'பைசன்' படத்தை பாராட்டிய பா.ஜ.,வின் முன்னாள் தலைவர் அண்ணாமலை! | ஹாட்ரிக் ரூ.100 கோடி வசூலை தந்த பிரதீப் ரங்கநாதன் | அக்டோபர் 31ல் நெட் பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் தனுஷின் இட்லி கடை! | 5 நிமிட நடனத்திற்கு ஐந்து கோடி சம்பளம் வாங்கும் பூஜா ஹெக்டே! | கருத்த மச்சான் பாடலுக்கு மமிதா பைஜூ அசத்தல் நடனம் ! வைரலாகும் வீடியோ!! | கிண்டல் செய்த ரசிகருக்கு பதிலடி கொடுத்த சூரி | 'பராசக்தி' பாடல்கள் விரைவில்… ஜிவி பிரகாஷ் தகவல் | கதை நாயகியான கீதா கைலாசம் |
இந்தியத் திரையுலகில் 1000 கோடி வசூலைக் கடந்து வெளியாகி ஒரு மாதம் ஆனாலும் இன்னமும் தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்கும் படம் 'கேஜிஎப் 2'. இப்படத்தை எந்தவித முன்னறிவிப்பும் இன்றி நேற்று ஓடிடி தளத்தில் வெளியிட்டார்கள்.
இப்படத்திற்கு மட்டும் தனியாக பணம் செலுத்திதான் பார்க்க வேண்டும் என்றாலும் திடீரென படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட்டது தியேட்டர்காரர்களிடம் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பல தியேட்டர்களில் படத்தை இன்றுடன் தூக்கிவிட முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
தியேட்டர்களில் நன்றாக ஓடிக் கொண்டிருக்கும் இப்படத்தை இப்படியா வெளியிடுவது என தயாரிப்பாளர்கள் மீது தியேட்டர்காரர்கள் கேள்வி மேல் கேள்வி கேட்கிறார்களாம். ஒரு மாநிலத்தில் மட்டும் வெளியாகியிருந்தால் பரவாயில்லை. பான்--இந்தியா படமாக வெளியாகி அனைத்து இடங்களிலும் நன்றாக ஓடும் படத்திற்கு ஒரு மாதத்திற்குள்ளாக ஓடிடி வெளியீடு ஏன் என்று அவர்கள் கேள்வி எழுப்புகிறார்களாம்.
1200 கோடிக்கும் மேலும் வசூல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட 'கேஜிஎப் 2' படம் விரைவில் முழுவதுமாக தியேட்டர்களை விட்டு தூக்கப்படும் எனத் தெரிகிறது.