2046ல் என்ன நடக்கும் ? ரஜிஷா விஜயனின் புதிய படம் பதில் சொல்லும் | ஆல்பம் பாடலில் அதிர வைக்கும் அழகுடன் மஞ்சு வாரியர் | ‛ஐ நோபடி' படப்பிடிப்பை நிறைவு செய்த பிரித்விராஜ் | ‛திரிஷ்யம் 3' கிளைமாக்ஸ் ஷாக்கிங் ஆக இருக்கும் : நடிகை ஆஷா சரத் | சம்பளத்துக்கு பதிலாக ஷேர் வாங்கும் அல்லு அர்ஜுன்! | மீண்டும் ஜிம்மில் ஒர்க்அவுட் செய்யும் வீடியோவை வெளியிட்ட திரிஷா! | 'வித் லவ்' படத்தின் வசூல் விவரம் குறித்து தகவல் இதோ! | தெலுங்கு படத்தை இயக்கும் 'மார்கோ' பட இயக்குனர்! | ஜி.வி. பிரகாஷூக்கு மாமாவாக நடிக்கும் வாய்ப்பை மிஸ் செய்த விஜய் ஆண்டனி! | இரண்டாவது முறையாக பாலிவுட் இளம் நடிகருடன் இணையும் ராஷ்மிகா! |

கடந்த சில வருடங்களாகவே தங்களது அபிமான நடிகர்கள் நடித்து வரும் படங்களுக்கு அவர்களது ரசிகர்கள் அப்டேட் கேட்டு சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர், இயக்குனர்களை தொந்தரவு செய்து வருவது ஒரு வாடிக்கையாகவே மாறிவிட்டது. குறிப்பாக தமிழில் அஜித் நடிக்கும் படங்களின் தகவல்கள் பெரிய அளவில் வெளியாகாமல் ரகசியமாகவே பாதுகாக்கப்படும் என்பதால், அவரது ரசிகர்கள் பிரதமர் மோடி வரை அப்டேட் கேட்டு அதை வைரல் ஆக்கினார்கள்.
இந்த நிலையில் தெலுங்கில் நடிகர் பிரபாஸ் நடித்து வரும் சலார் படத்திற்கு சமீபகாலமாக அப்டேட் எதுவும் வெளியாகாததால் விரைவில் அப்டேட் வெளியிடுமாறும் இல்லை என்றால் தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாகவும் ரசிகர் ஒருவர் எழுதியுள்ள கடிதம் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே சாஹோ மற்றும் ராதே ஷ்யாம் படங்கள் நீண்ட தாமதத்திற்கு பிறகு வெளியானதால் தோல்வியை தழுவின என்றும், சலார் படத்தை உரிய நேரத்தில் சீக்கிரமாக முடித்து வெளியிட வேண்டும் என்றும் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ள அந்த ரசிகர் கடைசி வரிகளை ரத்தத்தில் எழுதியதுபோன்று சிவப்பு நிற எழுத்துக்களால் எழுதியுள்ளார்.
இப்படிப்பட்ட ரசிர்களை என்னவென்று சொல்வது. மாய உலகமான சினிமா மோகம் இவரை எந்தளவுக்கு தள்ளி உள்ளது என பலரும் அதிர்ச்சி உடன் வேதனைப்படுகின்றனர்.




