ஜனவரி 23ல் நிவின்பாலியின் 'பேபி கேர்ள்' ரிலீஸ் | ஜெயராம், காளிதாஸ் இணைந்து நடத்துள்ள படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | ரம்பா மகளா இவர்?; பிறந்தநாள் கொண்டாடிய லான்யா | மலையாள 'எக்கோ' பட நடிகையை பாராட்டிய தனுஷ் | 'திரிஷ்யம் 3' படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த மோகன்லால் | எனக்கு நானே போட்டி: கிர்த்தி ஷெட்டியின் தன்னம்பிக்கை | விஜே சித்துவின் 'டயங்கரம்' படத்தின் முதல் பார்வை வெளியானது! | தனுஷ் 54வது படத்தின் தலைப்பு 'கர' | அருள்நிதி, ஆரவ் இணைந்து நடிக்கும் 'அருள்வான்' | பிளாஷ்பேக்: நடிகர் திலகத்தின் திரைப்படத்தில் அறிமுகமான இளைய திலகம் |

மாநகரம், கைதி, மாஸ்டர் படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் தயாரித்து நடித்த படம் விக்ரம். அவருடன் விஜய்சேதுபதி, பகத் பாசில், நரேன், காளிதாஸ் ஜெயராம் ,செம்பன் வினோத் , சூர்யா உள்பட பலர் முக்கிய வேடங்களில் நடித்த விக்ரம் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். கடந்த ஜூன் 3ஆம் தேதி திரைக்கு வந்த இப்படம், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என 5 மொழிகளில் மிகப் பெரிய அளவில் வசூல் செய்திருப்பதாக பாக்ஸ் ஆபீஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அந்த வகையில், இப்படம் திரைக்கு வந்து 5 நாள்களில் 200 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. அதுமட்டுமின்றி இந்த ஆண்டு தமிழில் இதுவரை வெளியான படங்களில் குறைந்தநாளில் அதிக வசூல் செய்த படம் என்ற பட்டியலில் கமலின் விக்ரம் படமும் இணைந்துள்ளது.