2025 கூகுள் சர்ச் : 3வது இடத்தில் 'கூலி' | வா வாத்தியார் படத்தின் டிரைலர் வெளியானது | மலேசியாவில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்த அஜித் | ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் | டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் | ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் |

ராஜமவுலி இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர், ராம்சரண் நடிப்பில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளில் வெளியான படம் ஆர்ஆர்ஆர். இதற்கு முன்பு ராஜமௌலி இயக்கிய பாகுபலி படத்தைப் போன்று இந்தப் படமும் ஆயிரம் கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்திருக்கிறது. இந்த நிலையில் ஆர்ஆர்ஆர் படத்தை பார்த்த ஹாலிவுட் திரைப்பட எழுத்தாளர் ராபர்ட் கார்கில் என்பவர் இந்த படத்தை பாராட்டி டுவிட்டரில் ஒரு பதிவு போட்டு உள்ளார். அதில், இதுவரை நான் பார்த்த படங்களில் நேர்மையான வெறித்தனமான வித்தியாசமான பிளாக்பஸ்டர் திரைப்படம் இது. ஆர் ஆர் ஆர் படத்தை எனது நண்பர்களின் அழைப்பின் பேரில் பார்க்க சென்றேன். ஆனால் இப்போது நானும் இந்த படத்திற்கு மிகப்பெரிய ரசிகன் ஆகிவிட்டேன் என்று தெரிவித்திருக்கிறார். இந்த ராபர்ட் கார்கில், ஹாலிவுட்டில் வெளியான சினிஸ்டர், டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் என பல படங்களுக்கு திரைக்கதை எழுதியவர். சில நாவல்களும் எழுதி உள்ளார்.