விரைவில் யூத் பட வெற்றி விழா | நிறையபேர் கைலாசம் போயிட்டாங்க, ரஞ்சிதா கைலாச போயிட்டாங்க : கஸ்தூரி | 'காந்தாரா' அவதூறு : சாமுண்டி கோவிலுக்கு சென்று மன்னிப்பு கேட்க ரன்வீர் சிங்கிற்கு கோர்ட் உத்தரவு | 'நீளிரா' பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் : 'யமகாதகி' புகழ் ரூபா | துரந்தர் காட்சி : மன்னிப்பு கேட்ட மாதவன் | பிளாஷ்பேக் : திருமண வாழ்க்கை தோல்வியால் ஒளிப்பதிவாளரான விஜயலட்சுமி | பிளாஷ்பேக் : ஒரே படத்தின் லாபத்தில் ஸ்டூடியோ கட்டிய தயாரிப்பாளர் | குஷ்புவை தொடர்ந்து கணவர் சுந்தர் சியும் அரசியலில் களமிறக்கம் : மதுரை மத்தியில் போட்டி | ஒரு பில்லியன் பார்வைகளைப் பெற்ற முதல் டிரைலர் ; ஸ்படைர்மேன் : பிராண்ட் நியூ டே | 'காந்தாரா' கதாநாயகியை 'அன்பாலோ' செய்த ரிஷப் ஷெட்டி |

இந்த வருட ஓணம் பண்டிகை கொண்டாட்டமாக மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் ஹிருதயபூர்வம், பஹத் பாசில் நடிப்பில் ஓடும் குதிரை சாடும் குதிரை மற்றும் கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் லோகா சாப்டர் 1 சந்திரா ஆகிய படங்கள் வெளியாகின. தொடரும் படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு வெளியாகும் மோகன்லால் படம் என்பதால் ஹிருதயபூர்வம் படத்திற்கும் மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. அதேபோலத்தான் பஹத் பாசில் படமும். ஆனால் இந்த இரண்டு படங்களும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை ஈடுகட்ட தவறிவிட்டன. அதே சமயம் சூப்பர் வுமன் கதை அம்சத்துடன் வெளியாகிய கல்யாணி பிரியதர்ஷனின் லோகா சாப்டர் 1 சந்திரா திரைப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றுள்ளது.
படம் வெளியான மறுநாளில் இருந்தே இந்த படத்திற்கு காட்சிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இது எந்த அளவிற்கு என்றால் மோகன்லால், பஹத் பாசில் படத்தை விட கல்யாணியின் படத்திற்கு காட்சிகள் அதிக அளவில் திரையிடப்பட்டுள்ளன. இன்று (ஞாயிறு) கொச்சியில் உள்ள திரையரங்குகளில் மட்டும் லோகா 196 காட்சிகளும் ஹிருதயபூர்வம் 134 காட்சிகளும் ஓடும் குதிரை சாடும் குதிரை 82 காட்சிகளும் திரையிடப்பட்டுள்ளதே இதற்கு சான்று. கேரளா முழுவதிலும் கல்யாணியின் படத்திற்கு காட்சிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.