காஞ்சனா 4 படத்தில் ராஷ்மிகா மந்தனா? | ரஜினி - கமலை இணைத்து படம் இயக்க ஆசைப்படும் கே.எஸ்.ரவிக்குமார் | என்னை பிரபலப்படுத்தாதீங்க... : அஜித் பேச்சு | சினிமாவில் பாலகிருஷ்ணா 50 : வாழ்த்திய ரஜினி | சமோசா மீது எனக்கு தனி லவ் : தமன்னா | ஜெயிலர் 2 பற்றி ஓவராக பேசி ஹைப் ஏற்ற விரும்பவில்லை : நெல்சன் | மாதம்பட்டி ரங்கராஜ் கொஞ்சி பேசும் வீடியோவை வெளியிட்ட ஜாய் கிரிசில்டா | அஜித் 64வது படம் தாமதமாகிறது...? | முதல் குழந்தை வீட்டிற்கு வருவதற்கு முன் ஆறு குழந்தைகளை பறிகொடுத்தேன் : சன்னி லியோன் | மோகன்லால் படத்தை விட கல்யாணியின் படம் காட்சிகள் அதிகரிப்பு |
கல்லூரி நிகழ்ச்சியொன்றுக்காக கோவை வந்திருந்தார் பாஸ்கி. 80ஸ் கிட்ஸ், 90ஸ் கிட்ஸ், 2கே கிட்ஸ் வரைக்கும், வெவ்வேறு துறைகளில் இவர் பிரபலம். எக்ஸ்பிரஸ் வேகத்தில் துள்ளும் நகைச்சுவை. அள்ளும் சிரிப்பு. தன்னம்பிக்கையின் அவசியத்தை தனக்கே உரிய பாணியில் மாணவர்களிடம் கூறி, அவர்கள் சிரிக்க சிரிக்க அள்ளி விட்டுக் கொண்டிருந்தார்.
'முடியாதுன்னு சொன்னாங்க... முடிச்சு காட்டினேன்'
உங்கள சுத்தி இருக்கறவங்க, நீங்க எது பண்ணினாலும், உனக்கு அது வராது, வேண்டாம் அப்டினு தடுத்துட்டே இருப்பாங்க. அதையெல்லாம் மனசுல போட்டுக்கவே கூடாது.
நான் கிரிக்கெட் ஆடணும்னு சொன்னப்ப, உனக்கு வராதுனு சொன்னாங்க. இந்திய அணிக்கு தேர்வாகற அளவுக்கு ஆடினேன். நான், ரவிசாஸ்திரி, ஸ்ரீகாந்த் எல்லாம் ஒரே செட். துரதிருஷ்டவசமா பவுலிங் போடமுடியாத நிலைமை. ஸ்போர்ட்ஸ் கோட்டால, ஐ.ஓ.பி.,ல வேல கிடச்சது.
ஜோக் எழுதினேன். வராதுனு சொன்னாங்க. ஒரு லட்சம் ஜோக்காவது எழுதிருப்பேன். நிறைய நிராகரிப்பு. ஆனா 17 ஆயிரம் ஜோக் பிரசுரம் ஆச்சு.
ரேடியோ ஜாக்கி பண்ணலாம்னு போனேன். குரல் சரியில்ல, உனக்கு வராதுனு சொன்னாங்க. ரேடியோ, நிகழ்ச்சித் தொகுப்பு, கிரிக்கெட் வர்ணனைனு இதுவரைக்கும் 18,000 நிகழ்ச்சி பண்ணிருக்கேன்.
டி.வி.,ல இன்டர்வியூ பண்ணலாம்னு முடிவெடுத்தேன். உனக்கு வராது. சக்ஸஸ் ஆக மாட்டேன்னு சொன்னாங்க. இதுவரைக்கும், 4,000 பேர இன்டர்வியூ பண்ணிருக்கேன்.
மாடலிங் பண்ணலாம்னு யோசிச்சேன். உனக்கு பர்சனாலிடி இல்லேனு சொன்னாங்க. பி.சி., ஸ்ரீராமே 5 விளம்பரங்கள்ல நடிக்க வச்சுருக்கார். இந்த மாதிரி எதெல்லாம் வராதுனு சொன்னாங்களோ, அதெல்லாம் நான் காதுலயே போட்டுக்கல. 12 துறைகள்ல ஜெயிச்சிருக்கேன்.
எந்த சூழ்நிலையையும் நகைச்சுவையோட, கிண்டலடிச்சு கடந்து போக பழகுங்க. என் மனைவி உட்பட மிக நெருங்கிய உறவுகளை அடுத்தடுத்து இழந்தபோதும், நகைச்சுவை உணர்வுதான் என்னை உயிர்ப்போட வச்சுருந்தது. கமிட்மென்ட் வச்சுக்குங்க. கண்டிப்பா ஜெயிக்கலாம்.
சச்சினோட திறமையோட ஒப்பிட முடியாவிட்டாலும், அந்த அளவுக்கு சதமோ, ரன்களோ அடிக்காத தோனியோட தன்னம்பிக்கைதான், அவர அந்த உயரத்துக்கு கொண்டு போயிருக்கு. அவரோட ஆட்டோபயோகிராபி படம்தான் சக்ஸஸ்.
எல்லா சூழ்நிலையிலும் உங்களோட 'ஹ்யூமர் சென்ஸ்' உங்கள காப்பாத்தும். அது ரொம்ப பெரிய ஆயுதம். நீங்க டல்லா இருக்கறதா காமிச்சா, ஏறி மிதிச்சுட்டு போயிருவாங்க. உங்கள வெறுப்பேத்த தூண்டினாலும், கூலா, கிண்டலா பதில் சொல்லுங்க.
எதுக்கும் லாயக்கில்லனு சொல்வாங்க. அதெல்லாம் கவலைப்படக்கூடாது. நம்மள கோவப்பட வைக்க, வருத்தப்பட வைக்க, வெறுப்பேத்தி சந்தோஷப்பட அவங்க அத சொல்வாங்க. நாம ஏன் அத கேக்கணும். தன்னம்பிக்கையோட செய்ங்க.கண்டிப்பா ஜெயிக்கலாம்.
ஏதாவது ஒரு விளையாட்டுல இருங்க. அது உங்க உடம்ப ஆரோக்கியமா வைக்கும். யோகா பண்ணுங்க, உங்க மனசு ஆரோக்கியமா இருக்கும். மியூசிக் உங்களோட ரசனையை அதிகரிக்கும். நகைச்சுவை உணர்வு எந்த சூழ்நிலையையும் சமாளிக்க உதவும். இந்த நாலும் இருந்தா, நீங்கதான் சுந்தர் பிச்சை, சுந்தரி பிச்சை எல்லாமே.
கறுப்பா, நல்லா தமிழ் பேசக்கூட தெரியாத ரஜினிதான், சூப்பர்ஸ்டார். பொதுமக்களுக்கு விசில் அடிச்ச வேலை செஞ்சவருக்கு,இன்னிக்கு ஒட்டுமொத்த பொதுமக்களும் விசில் அடிச்சு கொண்டாடறாங்க. அவரை விட ஜெயிக்கறதுக்கு பெஸ்ட் பார்முலா வேறென்ன.