ஜான்வி கபூர் : கிளாமர் வாய்ப்புகளை மட்டுமே தரும் தெலுங்கு சினிமா | மக்கள் மேடை : தனி இயக்கம் துவக்கினார் ரஜினி மனைவி லதா | 60 வயதில் மூன்றாவது திருமணம் : அமீர்கானை விமர்சிக்கும் ரசிகர்கள் | காஜல் அகர்வால் நடிக்கும் 'தி இந்தியா ஸ்டோரி' ஜூலை 24ம் தேதி வெளியாகிறது! | மீண்டும் வெப் சீரிஸில் நடிக்கும் நாகசைதன்யா | ஜனநாயகன் : வினியோகஸ்தர்களுக்கு பணம் திருப்பித் தரப்படுகிறதா? | கருப்பு - தமிழக வசூல் 175 கோடி, அதிகாரப்பூர்வ அறிவிப்பு | பெத்தி : முதல் நாள் வசூல் ரூ.135 கோடி | 8 வருடங்களுக்கு பிறகு நாயகியாக திரும்பி வரும் ஆஸ்னா ஜவேரி | மறுபிரவேசம் தொடங்கி விட்டது : ஈடன் மகிழ்ச்சி |

ம துவுக்கு எதிரான போராட்டத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டு, தற்போது திரைக்கு வந்துள்ள சினிமா குயிலி. லிசி ஆண்டனி, ரவிச்சந்திரன் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தின் கதாநாயகனாக நடித்துள்ள ரவிச்சந்திரன், காரமடை அருகே திம்மம்பாளையத்தை சேர்ந்தவர்.
தனது கலை உலகப் போராட்டம் குறித்து ரவிச்சந்திரனிடம் பேசியபோது...
பத்தாம் வகுப்பு படித்து முடித்ததும் சினிமா ஆசையில் சென்னை சென்றேன். அங்கு நடிக்க வாய்ப்பு கிடைக்காததால், கலை இயக்குனர்களிடம் உதவியாளராக சேர்ந்தேன். இயக்குனர் பாலாவின், 'பரதேசி' உள்ளிட்ட பல படங்களில் கலை இணை இயக்குனராக பணிபுரிந்தபடி நடிக்க வாய்ப்பு தேடி வந்தேன்.
எங்கள் பகுதியைச் சேர்ந்த முருகசாமிக்கு குயிலி படம் இயக்க வாய்ப்பு கிடைத்தது. அப்படத்தில் மதுவுக்கு அடிமையாகி இறக்கும் கதாநாயகனாக நடித்துள்ளேன். ஏழை அடித்தட்டு மக்கள் மதுவால் பாதிக்கப்படுவது குறித்தும், அதற்கு எதிராக போராடும் மக்கள் குறித்தும் அப்படம் பேசுகிறது. அதன் காரணமாகவே பல தரப்பினராலும் பாராட்டப்படுகிறது.
கதாநாயகனாக நடிக்க வேண்டும் என்பதற்கான எனது 27 ஆண்டு போராட்டம் தற்போது நிறைவேறியுள்ளது. எனது கிராமத்துக்கு அருகில் உள்ள அன்னுாரில் இத்திரைப்படம் ஓடுவது மகிழ்ச்சி. தாய்மார்கள் பலரும் பாராட்டுகின்றனர். மத்திய, மாநில அரசுகளின் விருதுகளுக்காக இப்படத்தை தயாரிப்பாளர் அனுப்ப உள்ளதாக, கூறினார்.




