இனி டாக்டர் ஸ்ரீலீலா | ‛ஓ பட்டர்பிளை' படத்திற்கு ‛மூன்று முடிச்சு' என தலைப்பு வைக்க நினைத்த இயக்குனர் | ரவி மோகனுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது : பாடகி கெனிஷா வெளியிட்ட தகவல் | சிரஞ்சீவியின் ‛விஸ்வாம்பரா' பார்வையாளர்களை திகைக்க வைக்கும் : இயக்குனர் வசிஷ்டா | மருத்துவமனையில் நடிகை விசித்ரா வெளியிட்ட பதிவு | வெங்கடேஷ் படத்தில் இணையும் கதாநாயகிகள் யார் | ரஜினி படத்துடன் மோதுகிறது சூர்யா 47 படம் | சர்வம் டெலுலு எப்படி சர்வம் மாயா ஆனது : இயக்குனர் பகிர்ந்த சுவாரஸ்யம் | இரவில் ரஜினி உடன் பைக் ரைட் : ராதிகா சொன்ன பிளாஷ்பேக்... | 100 ஆண்டுக்கு அப்புறம் தான் ரிலீஸ்; ஆனா இப்பவே படம் 'ரெடி': ஹாலிவுட்டில் புது கூத்து! |

நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த திரைப்படம் 'ஜெயிலர்'. இப்படம் உலகளவில் ரூ. 600 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை செய்தது. ஜெயிலர் 2 படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. முதல் பாகத்தில் இடம் பெற்ற ரம்யா கிருஷ்ணன், மிர்னா மேனன் உள்ளிட்டோர் இந்த பாகத்திலும் நடித்து வருகின்றனர். இவர்கள் அல்லாமல் முதல் பாகத்தில் கேமியோ ரோலில் நடித்த சிவராஜ் குமார் மற்றும் மோகன்லாலும் இந்த பாகத்திலும் தொடர்கின்றனர். ஏற்கனவே இந்த படத்தில் எஸ்.ஜே. சூர்யா இணைந்து நடித்து வருகிறார். இவரை தொடர்ந்து இந்த படத்தில் பாலிவுட் நடிகை வித்யாபாலன் இணைந்துள்ளார். இதனை படக்குழு சர்ப்ரைஸ் ஆக வைத்துள்ளனர். வித்யாபாலன் பாலிவுட்டில் முன்னனி நடிகையாக வலம் வந்தாலும் தமிழில் நேர்கொண்ட பார்வை படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் மட்டும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.




