சினிமாவில் பாலகிருஷ்ணா 50 : வாழ்த்திய ரஜினி | சமோசா மீது எனக்கு தனி லவ் : தமன்னா | ஜெயிலர் 2 பற்றி ஓவராக பேசி ஹைப் ஏற்ற விரும்பவில்லை : நெல்சன் | மாதம்பட்டி ரங்கராஜ் கொஞ்சி பேசும் வீடியோவை வெளியிட்ட ஜாய் கிரிசில்டா | அஜித் 64வது படம் தாமதமாகிறது...? | முதல் குழந்தை வீட்டிற்கு வருவதற்கு முன் ஆறு குழந்தைகளை பறிகொடுத்தேன் : சன்னி லியோன் | மோகன்லால் படத்தை விட கல்யாணியின் படம் காட்சிகள் அதிகரிப்பு | நடிகை ரம்யா மீது அவதூறு தாக்குதல் : இதுவரை நடிகர் தர்ஷினின் 12 ரசிகர்கள் கைது | மலையாள திரையுலகை பிடித்து ஆட்டும் கேமியோ ஜுரம் | முதலில் ‛பியார் பிரேமா காதல்' இப்போது ‛பியார் பிரேமா கல்யாணம்' |
ஹரிஷ் கல்யாண், ரைசா வில்சன் நடித்த ‛பியார் பிரேமா காதல்' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் இளன். இந்த படத்தின் வெற்றிக்குப் பிறகு கவினை வைத்து ‛ஸ்டார்' எனும் படத்தை இயக்கினார். ஆனால், இப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. ஸ்டார் படத்திற்கு பிறகு இளன் அடுத்த படம் குறித்து எந்தவொரு அறிவிப்பும் வெளிவரவில்லை.
கடந்த சில மாதங்களாக இளன் அடுத்து அவரே இயக்கி, கதாநாயகனாக புதிய படத்தில் நடிக்கவுள்ளார் என தகவல் வருகிறது. இதற்கான முன் தயாரிப்பு பணிகளை அவர் மேற்கொண்டு வருகிறார் என கூறப்படுகிறது. இதை ஏ.ஜி.எஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கின்றனர். தற்போது இந்த படத்திற்கு 'பியார் பிரேமா கல்யாணம்' என தலைப்பு வைத்துள்ளதாக தகவல் கூறப்படுகிறது.