மீண்டும் சிவகார்த்திகேயனிடம் கதை சொன்ன ஏ.ஆர்.முருகதாஸ் | பைசன் படத்தின் 2வது பாடல் வெளியானது | ‛யாத்திசை' இயக்குனருடன் இணையும் ரவி மோகன் | பிளாஷ்பேக்: பாலுமகேந்திரா ஓவியமாய் தீட்டிய முதல் திரைக்காவியம் “கோகிலா” | அக். 10ல் ஒளிபரப்பாகும் ‛வேடுவன்' வெப் தொடர் | மதராஸி ஓடிடி வெளியீடு எப்போது | சிம்புதேவன் இயக்கத்தில் விமல்? | 21 ஆண்டுகளுக்குப் பிறகு ரீ-ரிலீஸ் ஆகும் அட்டகாசம் | ‛சூர்யா 46' படத்தின் ஓடிடி உரிமம் இத்தனை கோடியா? | வேறொருவரை வைத்து தெலுங்கு டப்பிங்: 'கிஸ்' இயக்குனர் மீது விடிவி கணேஷ் அதிருப்தி |
சின்னத்திரை பிரபலங்களான தீபக், அபிநவ்யா காதல் திருமணம் சில மாதங்களுக்கு முன் கோலாகலமாக நடந்து முடிந்தது. சின்னத்திரை ஜோடிகளில் ரசிகர்களின் பேவரைட் ஜோடிகளான இருவரும் அடிக்கடி தங்கள் காதல் கதைகளை சோஷியல் மீடியாக்கள் மூலம் ரசிகர்களுடன் பகிர்ந்து வருகின்றனர். சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டிக் கொடுத்த அபிநவ்யா, தீபக் தனக்கு முழுசுதந்திரம் கொடுத்துள்ளதாக பெருமையாக பேசியிருந்தார்.
தற்போது அவர், போட்டோஷூட் ஒன்றுக்காக தீபக்கை உட்கார வைத்து மேக்கப் போட்டு விடுகிறார். அப்போது தன் காதல் கணவரின் நெற்றியில் முத்தமிட, ஒரு கணம் ஷாக்கான தீபக் அபிநவ்யாவை பார்த்து வெட்கத்தில் சிரிக்கிறார். இந்த ரொமான்ஸ் வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. தீபக் - அபிநவ்யாவுக்கு இடையே இருக்கும் இந்த அன்னியோனியத்தையும் காதலையும் பார்க்கும் ரசிகர்கள் 'இதுவல்லவோ காதல். இதுவல்லவோ ஜோடி' என புகழ்ந்து வருகின்றனர்.