மீண்டும் தெலுங்கு படத்தில் நடிக்கும் பிரிகிடா சகா! | நாட்டின் மிகப்பெரிய நட்சத்திரத்தோடு போட்டியிட முடியுமா? சுதா கொங்கரா | மீண்டும் தள்ளிப்போனது 'தெறி' ரீ ரிலீஸ் | மதுரை, திருநெல்வேலி, திருச்செந்துார்... ஜீவா ஓடுவது ஏன்? | மீண்டும் ஷாருக்கானுடன் இணையும் அட்லி: 'டான் 3'ஐ இயக்குகிறாரா? | ரவி மோகனின் நிழலாக இருக்கும் கெனிஷா | 35 ஆண்டுகளுக்கு பிறகும் ஹிட்டான 'சுந்தரி கண்ணால் ஒரு சேதி' | பிளாஷ்பேக்: மறைந்த மலையாள நடிகர் ஜெயனை நினைவு கூறும் ஒரே தமிழ் திரைப்படம் “பூட்டாத பூட்டுக்கள்” | மங்காத்தா, தெறி: ரீரிலீஸ் டிரைலர் மோதல் | தோல்வியை நோக்கி, பிரபாஸின் 'தி ராஜா சாப்' |

சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி சின்னத்திரையில் முன்னணி ஹீரோயினாக வலம் வந்தவர் நடிகை நீலிமா ராணி. திருமணத்திற்கு பின் நடிப்புக்கு பிரேக் விட்டுள்ள நீலிமா, சீரியல் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவரை ஏராளமான ரசிகர்கள் இண்ஸ்டாவில் பின் தொடர்ந்து வருகின்றனர். நீலிமாவும் போட்டோஷூட், ரசிகர்களுடன் சேட் என ஆக்டிவாக இருந்து வருகிறார்.
இந்நிலையில், அண்மையில் ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அப்போது ஒருவர் நீலிமாவின் உள்ளாடை குறித்து ஆபாசமாக கேள்வி எழுப்பினார். அதற்கு நீலிமா, 'உன்கிட்ட ஏன் சொல்லனும்? நீ விக்கப்போறியா?' என பதிலடி கொடுத்துள்ளார். நோஸ்கட்டான அந்த நெட்டிசன் வாலை சுருட்டிக்கொண்டு ஓடிவிட்டார்.




