இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

இயக்குநர் சிகரம் பாலசந்தர் வெள்ளித்திரை மட்டுமல்லாது சின்னத்திரையிலும் தனது பெரும் பங்களிப்பை கொடுத்துள்ளார். பல புதுமுக நட்சத்திரங்களையும் அறிமுகம் செய்து வைத்துள்ளார். அந்த வகையில், பாலசந்தர் பட்டறையில் இருந்து வெளிவந்த மூத்த நடிகை தான் யுவஸ்ரீ ஜனார்த்தனன். தற்போது யுவஸ்ரீ சில சீரியல்களில் நடித்து வருகிறார். இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் யுவஸ்ரீ, இளம் நடிகர், நடிகைகளுடன் சேர்ந்து அடிக்கடி ரீல்ஸ் வீடியோக்களை வெளியிடுவார்.
இந்நிலையில் யுவஸ்ரீ மற்றும் மற்ற நடிகர்களுக்கு சீன் மற்றும் டயலாக்கை இயக்குநர் சிகரம் பாலசந்தர் ப்ராம்ப்டிங் செய்யும் பழைய வீடியோவை பகிர்ந்துள்ளார். இயக்குநர் சிகரத்துடன் பணிபுரிந்த அந்த பொன்னான தருணங்களை தனக்கு கிடைத்த ஆசிர்வாதம் எனவும் சிலாகித்து பதிவிட்டுள்ளார். இதை பார்க்கும் 2கே கிட்ஸ்கள் பலரும் 'இவர் இயக்குநர் சிகரத்தின் அறிமுகமா?' என ஆச்சரியத்தோடு கேட்டு வருகின்றனர்.