'ஸ்வீட்ஹார்ட்' படத்தால் 4 கோடி நஷ்டம்; வருத்தத்தில் யுவன் ஷங்கர் ராஜா | டெஸ்ட் - நேரடி ஓடிடி வெளியீட்டிலேயே பெரிய லாபம் | மோகன்லால் - விக்ரம் நேரடி மோதல் | 'இட்லி கடை' - இன்னும் தயாராகவில்லையா? | 'சிம்பு 49' படத்தில் சந்தானம்? ஹீரோவுக்கு இணையான கதாபாத்திரம் | 'கேம் சேஞ்ஜர்' கருத்து சொன்ன தமனை 'அன்பாலோ' செய்த ராம் சரண் | 'எல் 2 எம்புரான்' டிரைலர்களில் 'லைக்கா' பெயர் | ''மதம் மாற்ற முயற்சி பண்ணாதீங்க..'': பரபரப்பு வசனங்களுடன் 'பரமசிவன் பாத்திமா' டிரைலர் | மீண்டும் ஹிந்தி படத்தில் கீர்த்தி சுரேஷ்? | ஆகஸ்ட் 14ல் ரஜினியின் கூலி திரைக்கு வருகிறது? |
தொலைக்காட்சி பிரபலமான நீலிமா ராணி கர்ப்பமாக இருக்கும் போது தடுப்பூசி போட்டால் என்ன ஆகும் என்பதை பகிர்ந்து கொண்டார்.
90ஸ் கிட்ஸ்களின் பேவரைட் சீரியல்களில் வில்லியாகவும், நாயகியாகவும் நடித்து பிரபலமானவர் நீலிமா ராணி. சில படங்களிலும் முக்கிய கதாபாத்திரத்தில் தோன்றியுள்ளார். திருமணத்திற்கு பின் பெரிதாக நடிப்பில் கவனம் செலுத்தாமல் இருக்கிறார். இவருக்கு அதிதி என்ற மூன்று வயது பெண் குழந்தை இருக்கும் நிலையில் இரண்டாவதாக கர்ப்பமுற்றுள்ளார். இந்நிலையில் இவர் கொரோனா தடுப்பூசியும் செலுத்திக் கொண்டார். இது குறித்து பல கேள்விகள் ரசிகர்கள் மத்தியில் எழுந்து வந்த நிலையில் அதற்கு தற்போது நீலிமா விளக்கமளித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறிய போது, இப்போது நான் கர்ப்பமாக உள்ளேன். குடும்பத்தினர், மருத்துவர் அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள அறிவுறுத்தினர். தடுப்பூசி தொப்புள் கொடியையோ, குழந்தையையோ சென்றடையாது. இதை புரிய வைத்தது என் கணவர் தான். அதன் பிறகே தான் நான் தடுப்பூசி போட்டுக் கொண்டேன் எனக்கு எந்த பக்கவிளைவுகளும் ஏற்படவில்லை என தெளிவுப்படுத்தினார்.