அஜித் படத்தை தயாரிக்கும் அஜித் ரசிகர் | டேட்டிங் ஆப் சிக்கல்களை பேசவரும் 'நீ பாரெவர்' | மலையாள இயக்குனர் மீது பாலியல் புகார்: நடிகை கைது | புராணப்படத்தில் நடிக்கும் சமுத்திரகனி | 'ஹரிஹர வீர மல்லு': அவுரங்கசீப் கேரக்டரை மாற்றிய இயக்குனர் | பிளாஷ்பேக்: 3டி படத்தில் நடிக்க மறுத்த ரஜினிகாந்த் | பிளாஷ்பேக்: பெரும் தோல்வி அடைந்த பிரம்மாண்ட படம் | 'கேம் சேஞ்ஜர்' கமெண்ட்: மன்னிப்பு கேட்ட தயாரிப்பாளர் | 'கட்டா குஸ்தி 2' படத்தில் ஐஸ்வர்ய லட்சுமி இருக்கிறாரா? | கண்ணப்பா டீமுக்கும், ஹீரோயினுக்கும் என்ன பிரச்னை |
இயக்குனர் ஹரி திரையுலகில் நுழைந்து இருபது வருடங்களை நெருங்கும் நிலையில் முதன்முறையாக தனது மைத்துனரான அருண் விஜய்யை வைத்து படம் இயக்கி வருகிறார். கதாநாயகியாக பிரியா பவானி சங்கர் நடிக்க, பிரகாஷ்ராஜ், ராதிகா, யோகிபாபு உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். அருண் விஜய்யின் 33வது படமாக உருவாகும் இந்தப்படத்திற்கு யானை என டைட்டில் வைக்கப்பட்டு சமீபத்தில் இந்தப்படத்தின் நான்கு விதமான பர்ஸ்ட்லுக் போஸ்டர்களும் வெளியிடப்பட்டன.
நான்கு போஸ்டர்களிலும் விதம் விதமான லுக்கில் காட்சி அளிக்கிறார் அருண் விஜய். ஆனால் இந்த போஸ்டர்கள் எல்லாம் படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை வைத்து உருவாக்கப்பட்டவை அல்லவாம். படப்பிடிப்பு துவங்குவதற்கு முன்னரே அருண் விஜய்க்கு விதவிதமான லுக் டெஸ்ட் எடுக்கப்பட்ட சமயத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை வைத்தே இந்த போஸ்டர்கள் டிசைன் செய்யப்பட்டுள்ளன என்கிற ஒரு புது தகவலை பகிர்ந்து கொண்டுள்ளார் படத்தின் காஸ்ட்யூம் டிசைனரான நிவேதா ஜோசப்.