அநாகரீகமாக பேசிய நெட்டிசனை வச்சு செய்த சுனிதா | சீரியலிலிருந்து விலகிய மனிஷா ஜித் | பாரீஸ் சுற்றுலாவில் பிரியா பவானி சங்கர் | சமந்தாவை நேரில் சந்தித்தால்…. நாக சைதன்யா பதில் | ஆகஸ்ட்டில் மூன்று முக்கிய படங்கள் ரிலீஸ் | டிரணட் ஆகும் சிவன் பாடல் | வசூலை வாரிக் குவிக்கும் சீதா ராமம் | இந்தியாவில் 100 கோடி வசூலித்த தோர்: அதிகாரபூர்வ அறிவிப்பு | தமிழ் ராக்கர்ஸ் : கலை உலகின் வலியை சொல்லும் தொடர்: அறிவழகன் | வெளியானது தெலுங்கு பிக்பாஸ் சீசன் 6 புரோமோ, தமிழில் எப்போது ? |
கடந்த வாரம் இயக்குனர் ஹரி, நடிகர் அருண்விஜய் கூட்டணியில் யானை திரைப்படம் வெளியானது. அண்ணன்களையும் குடும்பத்தையும் பாதுகாக்கும் தம்பி என்கிற வழக்கமான டெம்ப்ளேட்டில் ஆணவக்கொலை என்கிற இன்னொரு விஷயத்தையும் சேர்த்து இந்த படத்தை உருவாக்கியிருந்தார் இயக்குனர் ஹரி. சரி படம் என்றாலே வழக்கமான சில கிளிஷே காட்சிகள் இருந்தாலும் கூட, படம் விறுவிறுப்பாக இருக்கும் என்பதே ரசிகர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது..
அந்தவகையில் இந்த யானை படத்திலும் ஹரியின் முந்தைய படங்களின் காட்சிகளையே மீண்டும் பார்ப்பது போன்ற உணர்வு ஏற்பட்டதாகவும் அதேசமயம் ஹரியின் முந்தைய படங்களை போன்ற விறுவிறுப்பு இதில் குறைவாக இருக்கிறது என்றும் ரசிகர்கள் பரவலாக கருத்து கூறி வந்தனர். இந்த நிலையில் இந்தப்படத்தில் ஐந்து நிமிட காட்சிகள் வெட்டப்பட்டுள்ளது என்றும் நேற்று முதல் புதிய யானை தியேட்டர்களில் திரையிடப்பட்டு வருகிறது என்றும் தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் எந்த ஐந்து நிமிட காட்சிகள் வெட்டப்பட்டன என்பதை படக்குழுவினர் வெளியிட மறுத்து விட்டார்கள் என்றும் சொல்லப்படுகிறது.