சினிமாவில் 60வது ஆண்டை தொட்ட வெண்ணிற ஆடை மூர்த்தி | ஜெயமோகன் படத்துக்கு இந்த நிலையா? | வில்லனாக மாறிய சேரன் | டான்ஸ் ஆட வெச்சிட்டாங்க : பிரபு நெகிழ்ச்சி | ஹரி ஹர வீரமல்லுவுக்காக 5 ஆண்டுகள் வேறு படங்களில் நடிக்காத நிதி அகர்வால் | பாலிவுட்டில் தடம் பதிப்பாரா ஜூனியர் என்டிஆர் | மோசடி வழக்கை சட்டப்படி சந்திப்பேன் : சாம் சி.எஸ் | பூமிகா ஆசை நிறைவேறுமா? | ஹீரோ இல்லாமல் நடந்த 'ஹரிஹர வீரமல்லு' பட விழா | ஜெயிலர் 2வில் மோகன்லால் இருக்கிறாரா? |
கேரளாவை சேர்ந்தவர் நடிகர் ஸ்ரீஜித் ரவி. மலையாளத்தில் நிறைய படங்களில் நடித்துள்ளார். தமிழில் ‛கும்கி' படத்தில் பாரஸ்ட் ஆபிசராக நடித்தார். தொடர்ந்து வேட்டை, கதகளி உள்ளிட்ட பல படங்களில் வில்லன் வேடங்களில் நடித்துள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன் பள்ளிக்கு சென்ற சிறுமியர்கள் முன்பு காரில் இருந்தபடி தனது ஆடையை கழற்றி அநாகரீகமாக நடந்து கொண்டார். ஆனால் அந்த நபர் யார் என்பது தெரியாமல் இருந்தது. இந்நிலையில் சிசிடி காட்சிகளின் அடிப்படையில் காரை அடையாளம் கண்ட போலீசார் அந்த நபர் நடிகர் ஸ்ரீஜித் ரவி என்பதை கண்டறிந்தனர். இதையடுத்து அவர் மீது போலீசில் புகார் அளிப்பட்டதை தொடர்ந்து குழந்தைகளிடம் அநாகரீகமாக நடந்து கொண்ட ஸ்ரீஜித் ரவியை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
இதற்கிடையே ஸ்ரீஜித் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கு சிகிச்சை பெறுவதாகவும் தெரிவித்துள்ளாராம். கடந்த 2016ம் ஆண்டும் இதே மாதிரியான வழக்கு ஒன்றில் ஸ்ரீஜித் ரவி கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.