'அறம்' தயாரிப்பாளர் ராஜேஷ் நாயகனாக நடித்த 'அங்கீகாரம்' டிரைலர் வெளியீடு | டிக்கெட் உயர்வை அனுமதிக்க மாட்டோம்: தெலுங்கானா தியேட்டர் சங்கம் | என்னை யாரும் கண்டுகிடலை.. நொறுங்கிய என் ஈகோ: பெங்களூருவில் ரஜினிகாந்த் பேச்சு | 6 மொழிகளில் தயாராகும் சிலந்தி 2ம் பாகம் | தயாரிப்பு நிறுவனத்தின் பெயரில் மோசடி: சிவகார்த்திகேயன் எச்சரிக்கை | தமிழில் மீண்டும் ஒரு ஜோம்பி படம் | ரவி மோகன் விருது விழாவில் கெனீஷாவின் இசை நிகழ்ச்சி | பிளாஷ்பேக்: குஷ்புவை நிராகரித்த பார்த்திபன் | பிளாஷ்பேக்: தணிக்கை குழுவால் சிதைக்கப்படட 'நல்ல தீர்ப்பு' | 2026 - வசூல், லாபத்தில் முதலிடத்தில் 'தாய் கிழவி' |

எஸ்.வி புரொடக்ஷன்ஸ் சார்பில் சிவசங்கர் தயாரிப்பில் உருவாகும் படம் 'அழகர் யானை'. மரகதக்காடு படத்தை இயக்கிய மங்களேஷ்வரன் இரண்டாவதாக இயக்கும் படம் இது. விஜய் டிவி புகழ் கதாநாயகனாக நடிக்கிறார். விஸ்மியா, நந்தினி நாயகிகளாக நடிக்கிறார்கள், இவர்கள் தவிர ஆர்யன், ஆடுகளம் முருகதாஸ் மற்றும் குழந்தை நட்சத்திரங்கள் காருண்யா, கோகுல் நடிக்கின்றனர். யானையை மையமாக வைத்து இந்த படம் உருவாகிறது.
படம் குறித்து இயக்குனர் மங்களேஷ்வரன் கூறும்போது, “இன்றைய சூழலில் வாழ்வின் மீதான நம்பிக்கை என்பது வாழ்க்கையில் பலருக்கும் குறைந்து வருகிறது. ஒருவருக்கு பணமோ மருத்துவ உதவியோ கொடுத்து உதவுவதை விட அவர்களுக்கு மனோரீதியாக நாம் தரும் நம்பிக்கை என்பதே மிக அவசியமாக இருக்கிறது. அப்படி ஒரு நம்பிக்கையை தரும் படமாக இந்த 'அழகர் யானை' உருவாகிறது. எல்லோருக்குமான மழையையும் காற்றையும் போல எல்லோருக்கும் அன்பையும் நம்பிக்கையையும் விதைப்பதே இந்த 'அழகர் யானை'.
கங்கைகொண்ட சோழபுரத்தில் 169 அடி உயரத்தில் ஒரு யானை சிலை இருக்கிறது. ராஜேந்திர சோழன் வெற்றி கொண்ட பிறகு அந்த யானையை நிறுவி அதற்கு 'அழகர் யானை' என பெயர் வைத்தார். ஒரு சோழ மன்னன் பாண்டிய நாட்டில் பயன்படுத்தப்படும் அழகர் என்கிற பெயரை வைத்துள்ளார். அந்த மாதிரி ஒரு நம்பிக்கையை விதைக்கும் விதமாகத்தான் 'அழகர் யானை' என்கிற பெயரை படத்திற்கு வைத்துள்ளோம்.
எம்ஜிஆரின் ‛நல்ல நேரம்', ரஜினிகாந்தின் ‛அன்னை ஓர் ஆலயம்', கமலின் ‛ராம் லட்சுமண்' ஆகிய படங்களைப் போல யானையை மையப்படுத்தி குழந்தைகள் ரசிக்கும் விதமாக இந்த படம் உருவாகிறது'' என்றார்.




