'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
மண்டேலா, கூர்கா உள்ளிட்ட படங்களில் கதையின் நாயகனாக நடித்த யோகிபாபு தற்போது கதையின் நாயகனாக நடிக்கும் படம் யானை முகத்தான். இந்த படத்தின் மூலம் மலையாள இயக்குநரான ரெஜிஷ் மிதிலா, தமிழில் இயக்குனராக அறிமுகமாகிறார். ரமேஷ் திலக், ஊர்வசி, கருணாகரன், ஜார்ஜ் மரியன், குளப்புள்ளி லீலா, நாகவிஷால் உள்பட பலர் நடிக்கின்றனர். கார்த்திக் நாயர் ஒளிப்பதிவு செய்கிறார், பரத் சங்கர் இசை அமைக்கிறார்.
படம் பற்றி இயக்குனர் ரெஜிஷ் மிதிலா கூறியதாவது: இந்த படத்தில் யோகி பாபு, கணேஷ் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அதே கணேஷ் கதாபாத்திரத்தில் ஆட்டோ டிரைவராக ரமேஷ் திலக் நடிக்கிறார். இவர் விநாயகர் மீது மிகுந்த நம்பிக்கை கொண்ட தீவிர பக்தர். ஏறக்குறைய தான் சந்திக்கும் அனைத்து நபர்களிடமும் கடன் வாங்கி விடுவார். பிறகு, வாங்கிய கடனைத் திருப்பி கொடுக்க முடியாமல் திணறுவார். ரமேஷ் திலக் வாங்கும் கடன்களுக்கு யோகி பாபு பொறுப்பேற்று எப்படி தீர்த்து வைக்கிறார் என்பதை காமெடியாக சொல்லும் படம். என்றார்.