கிங்டம் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | சாய் பல்லவியின் முதல் ஹிந்தி படம் நவ., 7ல் ரிலீஸ் | நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு நிபந்தனை ஜாமின் | பழம்பெரும் தெலுங்கு சினிமா பாடலாசிரியர் சிவசக்தி தத்தா மறைவு: இவர் இசையமைப்பாளர் கீரவாணியின் தந்தை | அடுத்த ஆண்டு ‛ராட்சசன் 2' : விஷ்ணு விஷால் கொடுத்த அப்டேட் | விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் படத்தை வாழ்த்திய ராஷ்மிகா | ஹரிஹர வீரமல்லு படத்தின் தமிழக உரிமை விற்பனை | ராமின் பறந்துபோ படத்தை பாராட்டிய நயன்தாரா | ‛ஆப் ஜெய்சா கோய்' படத்தில் என் கேரக்டர் சவாலானது : மாதவன் | ரஜினி படத்தை இயக்குகிறாரா வினோத் |
பாலிவுட் தயாரிப்பு நிறுவனமான வயகாம் 18 ஸ்டூடியோஸ், ‛கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' படத்திற்கு பிறகு தயாரிக்கும் படம் நித்தம் ஒரு வானம். ரைஸ் ஈஸ்ட் எண்டெர்டெய்ன்மெண்ட் ஸ்ரீநிதி சாகர் இணைந்து தயாரித்துள்ளார், இதனை அறிமுக இயக்குனர் ரா.கார்த்திக் இயக்கி இருக்கிறார்.
அசோக் செல்வன் நாயகனாக நடிக்க, ரிது வர்மா, அபர்ணா பாலமுரளி, ஷிவாத்மிகா ராஜசேகர், ஷிவதா என 4 நாயகிகள் நடித்துள்ளனர். இவர்கள் தவிர காளிவெங்கட், அபிராமி, அழகம் பெருமாள் உள்பட பலர் நடித்துள்ளனர். விது அய்யனா ஒளிப்பதிவு செய்துள்ளார், கோபி சுந்தர் இசை அமைத்துள்ளார்.
படம் குறித்து இயக்குனர் ரா.கார்த்திக் கூறியதாவது: வாழ்வென்பதே பயணம் தான். தினமும் நம் மேலே இருக்கும் வானம் கலைந்து போகும் மேகம் போல, வாழ்வின் பயணம் நம்முள் ஏற்படுத்தும் தாக்கங்களை, மனதை கொள்ளை கொள்ளும் அழகான திரைக்கதையில் சொல்லும் படம்தான் 'நித்தம் ஒரு வானம். மூன்று காலகட்டங்களில் நிகழும் கதை. நான்கு நாயகிகள் என்றாலும் இது ரொமான்ஸ் படமாக அல்லாமல், அன்பையும் வாழ்வின் மீதான நம்பிக்கையையும் பேசும் ஒரு அழகான கவிதையாக உருவாகியுள்ளது.
தமிழ், தெலுங்கு என இருமொழிகளிலும் ஒரே நேரத்தில் உருவாகி இருக்கும் இப்படம், சென்னை, குலுமனாலி, சிக்கிம், கோவா, டில்லி, சண்டிகர், கோல்கட்டா, விசாகப்பட்டினம், ஐதராபாத், மதுரை, பொள்ளாச்சி என இந்தியாவின் பல்வேறு அழகான இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது. படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்த நிலையில், இறுதிகட்ட பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. என்றார்.