ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் | தமிழ் படத்தில் மாலத் தீவு நடிகை | பிளாஷ்பேக்: பக்தி படத்தில் விஜயகாந்த் | பிளாஷ்பேக்: வில்லத்தனத்தில் மிரட்டி, வறுமையில் வாடிய நடிகை | ஐமேக்ஸ் தியேட்டர்கள் : 'ஜனநாயகன், தி ராஜா சாப்' படங்களுக்குப் புதிய சிக்கல் | மணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சாய் பல்லவி? |

வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள படம் ‛மாநாடு'. கல்யாணி பிரியதர்ஷன் நாயகியாக நடித்துள்ளார். எஸ்.ஜே.சூர்யா, எஸ்.ஏ.சந்திரசேகர், பிரேம்ஜி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. யுவன் இசையமைக்க, சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார். இப்படம் தீபாவளிக்கு வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பிரச்னையால் தற்போதைய சூழலில் தியேட்டர்கள் 50 சதவீதம் மட்டுமே திறக்கப்பட்டுள்ளதால் எப்படியும் தீபாவளிக்குள் 100 சதவீதம் அனுமதி அளிக்கப்படும் என்ற நம்பிக்கையில் இந்த முடிவை எடுத்துள்ளனர்.
அதேசமயம் அன்றைய தினம் சிவா இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள அண்ணாத்த படம் ரிலீஸாகிறது. மேலும் வினோத் இயக்கத்தில் அஜித்தின் வலிமை படத்தையும் ரிலீஸ் செய்ய பேசி வருகின்றனர்.




