‛மயோன் 2' உருவாகிறது | யானை படம் : பிரியா பவானி சங்கர் நம்பிக்கை | சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் கிர்த்தி ஷெட்டி | திருமணம் குறித்து எந்த ஐடியாவும் இல்லை : ஸ்ருதிஹாசன் | மதுரைக்கார இளைஞனாக மாறும் ஆர்யா | கமலுக்கு கோல்டன் விசா | பிரித்விராஜ் ஒரு கேரள கமல் : விவேக் ஓபராய் புகழாரம் | பாலியல் புகார் நடிகரின் ஜாமீனை ரத்து செய்ய உச்சநீதிமன்றத்தை நாடும் கேரள அரசு | இயக்குனர் சங்கத்திற்காக ஒன்றிணையும் ஜீத்து ஜோசப் - பிரித்விராஜ் | மோகன்லாலுக்கு வில்லனாக மாறும் ஹரீஷ் பெராடி |
ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வசந்தபாலன் இயக்கி முடித்துள்ள ஜெயில் படம் தயாரிப்பாளருக்கு இருக்கும் பிரச்சினைகள் காரணமாக வெளிவராமல் முடங்கி கிடக்கிறது. இந்த நிலையில் தனது பள்ளி நண்பர்களின் கூட்டுத் தயாரிப்பில் ஒரு படத்தை இயக்கி வந்தார். இந்த படத்திற்கு தற்போது அநீதி என்று தலைப்பு வைத்துள்ளார்.
சிவகார்த்திகேயன் மற்றும் பிசிஸ்ரீராம் இணைந்து சமூக வலைதளத்தில் படத்தின் டைட்டில் வீடியோவை வெளியிட்டுள்ளனர். ‛‛எங்கள் அர்பன் பாய்ஸ் ஸ்டூடியோ நிறுவனத்தின் முதல் குழந்தைக்கு பெயர் சூட்டியாகிவிட்டது உங்கள் அன்பும் ஆதரவும் வேண்டும் நன்றி" என்று வசந்தபாலன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் கூறியிருக்கிறார்.
இந்த படத்தில் மாஸ்டர் பட புகழ் அர்ஜுன் தாஸ், சர்பட்டா பரம்பரை புகழ் துஷாரா, அர்ஜுன் சிதம்பரம், வனிதா விஜயகுமார் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இதன் படப்பிடிப்பு சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வந்தது. இந்தப் படத்தின் இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ் பணிபுரிந்து வருகிறார்.