டிக்கெட் உயர்வை அனுமதிக்க மாட்டோம்: தெலுங்கானா தியேட்டர் சங்கம் | என்னை யாரும் கண்டுகிடலை.. நொறுங்கிய என் ஈகோ: பெங்களூருவில் ரஜினிகாந்த் பேச்சு | 6 மொழிகளில் தயாராகும் சிலந்தி 2ம் பாகம் | தயாரிப்பு நிறுவனத்தின் பெயரில் மோசடி: சிவகார்த்திகேயன் எச்சரிக்கை | தமிழில் மீண்டும் ஒரு ஜோம்பி படம் | ரவி மோகன் விருது விழாவில் கெனீஷாவின் இசை நிகழ்ச்சி | பிளாஷ்பேக்: குஷ்புவை நிராகரித்த பார்த்திபன் | பிளாஷ்பேக்: தணிக்கை குழுவால் சிதைக்கப்படட 'நல்ல தீர்ப்பு' | 2026 - வசூல், லாபத்தில் முதலிடத்தில் 'தாய் கிழவி' | ஜனநாயகன் : புது டைட்டில் கார்டு வேலைகள் ஆரம்பம்… |

வசந்தபாலன் இயக்கத்தில் கைதி, மாஸ்டர் படத்தில் நடித்த அர்ஜூன் தாஸ், அநீதி படத்தின் கதாநாயகனாக நடித்துள்ளார். துஷாரா விஜயன் நாயகியாக நடித்துள்ளார். வனிதா விஜயகுமார், நாடோடிகள் பரணி, சுரேஷ் சக்ரவர்த்தி, அறந்தாங்கி நிஷா, காளி வெங்கட் போன்றோர் நடித்துள்ளார்கள். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். அர்பன் பாய்ஸ் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இந்தப் படம் வருகிற ஜூலை 21ம் தேதி வெளியாக உள்ளது.
இதன் இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர் ஷங்கர் பேசியதாவது: இயக்குநர் வசந்தபாலன் அநீதி படத்தை அருமையாக எடுத்துள்ளார். படத்தில் நடித்த அர்ஜூன் தாஸ் நம்மை அழ வைக்கிறார். தனித்துவமாக நடித்துள்ளார். நடிகை துஷாரா விஜயனும் சிறப்பாக நடித்துள்ளார். காளி வெங்கட், வனிதா விஜயகுமார் உள்பட பலரும் நன்றாக நடித்துள்ளனர். இப்படத்தை ஒவ்வொரு தொழிலாளியும் முதலாளியும் பார்க்க வேண்டும். நமக்கு கீழ் வேலை செய்யும் மனிதர்களை எப்படி நடத்த வேண்டுமென கற்றுக்கொடுக்கும் சிறந்தபடமாக அநீதி இருக்கும். இவ்வாறு அவர் பேசினார்.




