ரியோ ராஜ் நடிக்கும் 'ஆண் பாவம் பொல்லாதது' | தனுஷ் - எச்.வினோத் படத்தின் புதிய அப்டேட்! | தமிழ் ரசிகர்கள் என்னை ஏற்பார்கள் : கயாடு லோகர் நம்பிக்கை | பிளாஷ்பேக்: ஒரே படத்தில் ஆக்ஷனில் கலக்கிய 80ஸ் ஹீரோயின்கள் | பிளாஷ்பேக்: ஒரே படத்தில் நடித்த எம்.எஸ்.சுப்புலட்சுமி மகள் | சென்னையில் 2 நாட்கள் பிக்கி மாநாடு : கமல் பங்கேற்கிறார் | பாலுமகேந்திரா நினைவேந்தல் நிகழ்ச்சி : இளையராஜா பங்கேற்பு | ஹாட்ரிக் வெற்றியில் ராஷ்மிகா மந்தனா | கனா படத்தில் நடித்த கிரிக்கெட் வீராங்கனைக்கு சிவகார்த்திகேயன் செய்த உதவி | சம்பளமா... இசை உரிமையா... எது வேண்டும்? : மலையாள தயாரிப்பாளர் சங்கம் புதிய கட்டுப்பாடு |
தமிழில் 'ரன்' படத்தில் அறிமுகமானவர் நடிகை மீரா ஜாஸ்மின். பின்னர் விஜய், அஜித்துடன் சேர்ந்து நடித்துள்ளார். விஷாலுடன் நடித்த சண்டைக்கோழி திரைப்படம் அவருக்கு நல்ல மார்க்கெட்டை அமைத்து கொடுத்தது. பின்னர் தமிழ், மலையாளம் என பல படங்களில் நடித்தார். பின்னர் திருமணம் ஆனதும் சில காலம் நடிப்பில் இருந்து விலகிய மீரா ஜாஸ்மின், தற்போது மீண்டும் நடிக்க துவங்கியுள்ளார். சமீபத்தில் தமிழில் இவர் நடித்த 'விமானம்' திரைப்படம் வெளியானது.
அடுத்ததாக நடிகர்கள் மாதவன், சித்தார்த் நடிப்பில் உருவாகும் 'டெஸ்ட்' படத்தில் நடிகை மீரா ஜாஸ்மின் நடிக்க உள்ளதாக படக்குழு சமீபத்தில் அறிவித்தது. இந்த படத்தில் நயன்தாராவும் நடிக்கிறார். இப்படத்தை இயக்குநர் சசிகாந்த் இயக்குகிறார். சக்திஸ்ரீ கோபாலன் இசையமைக்கிறார். இந்நிலையில் ஆங்கில நாளிதழ் ஒன்றில் மீரா ஜாஸ்மின் அளித்த பேட்டியில், ''நான் ஏற்கனவே மாதவன், சித்தார்த் உடன் நடித்துள்ளேன். தமிழ்படம், இறுதிச் சுற்று, விக்ரம் வேதா போன்ற படங்களை தயாரித்த சசிகாந்த் படத்தில் பங்கு பெற்றது மகிழ்ச்சி. நயன்தாராவுடன் நடிக்க ஆவலாக உள்ளேன்.
இதுவரை சிறப்பான பயணமாகவே இருந்து வந்துள்ளது. நடிகையாக கொண்டாடப்படுவது மகிழ்ச்சியானது. எனது தனிப்பட்ட வளர்ச்சி காரணமாக சினிமாவில் இருந்து சில ஆண்டுகள் விலகியிருக்கலாம் என முடிவு செய்துள்ளேன். பின்னர் வந்து படங்களில் நடிக்கலாமென திட்டமிட்டுள்ளேன். நான் பதிவிடும் பயணம் தொடர்பான எனது சமூக வலைதள புகைப்படங்களுக்கு ரசிகர்களிடமிருந்து நேர்மையான கருத்துகள் வருகிறது. என்னை பின் தொடர்பவர்களுக்கு இதையெல்லாம் பகிர்வதற்கு சமூக வலைதளம் உதவிகரமாக இருந்தது'' எனக் கூறியுள்ளார்.