பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' | கார் பார்க்கிங் பிரச்னை : பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் கைது | இந்தியன் 3 படத்தின் பணிகள் மீண்டும் துவங்கியது | இறுதி கட்டத்தில் 'லவ் மேரேஜ்' | பிளாஷ்பேக் : இந்தியன் பனோரமாவில் திரையிடப்பட்ட முதல் தமிழ்படம் | பிளாஷ்பேக் : லலிதா, பத்மினிக்காக காத்திருந்த ரசிகர்கள் | ஆஸ்கர் விருது வரை சென்ற 'லபாட்டா லேடீஸ்' படம் கதை காப்பி சர்ச்சையில் சிக்கியது | சினிமா ஆனது இந்தியாவின் முதல் மகாத்மாவின் வாழ்க்கை | 'பயர்' 50வது நாள் : சவாலான படங்களை தயாரித்து, இயக்க ஜே சதீஷ் குமார் முடிவு |
தமிழ் சினிமா உலகில் கடந்த சில பல வருடங்களில் காமெடி நடிகர்களில் வடிவேலு, சூரி, யோகி பாபு ஆகியோர்தான் முன்னணி நடிகர்களாக இருக்கின்றனர். இவர்கள் காமெடி கதாபாத்திரங்களில் நடித்து வந்தாலும் முதன்மைக் கதாபாத்திரங்களில் சீரியசான படங்களில் நடித்து பலரது பாராட்டுக்களைப் பெற்றுள்ளார்கள்.
அந்த வரிசையில் முதலில் யோகிபாபுவைக் குறிப்பிட வேண்டும். அவர் நடித்து 2021ம் ஆண்டில் வெளிவந்த 'மண்டேலா' படம் அவருக்கு பெரிய பாராட்டுக்களை அள்ளித் தந்தது. அது மட்டுமல்ல அந்தப் படம் அந்த ஆண்டிற்கான 68வது தேசிய திரைப்பட விருதுகளில் சிறந்த அறிமுக இயக்குனருக்கான தேசிய விருது, மற்றும் சிறந்த வசனகர்த்தாவுக்கான விருதுகளை படத்தை இயக்கிய மடோன் அஷ்வினுக்குப் பெற்றுத் தந்தது. அதற்குப் பிறகு அவர் சில படங்களில் கதாநாயகனாகவும், சில படங்களில் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் யோகிபாபுவின் பெயர் சொல்லும் படங்களில் முதன்மைப் படமாக இருந்து வருகிறது.
அடுத்து குறிப்பிட வேண்டியவர் சூரி. பல படங்களில் நகைச்சுவைக் கதாபாத்திரங்களில் நடித்து வந்த சூரி இந்த வருடம் வெளிவந்த 'விடுதலை' படத்தில் கதையின் நாயகனாக, முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சீரியசான அந்தக் கதாபாத்திரத்தில் அவருடைய நடிப்புக்கும் பலரது பாராட்டுக்கள் கிடைத்தன. மிக யதார்த்தமாக அக்கதாபாத்திரத்தில் அவர் நடித்திருந்ததாக விமர்சகர்கள் பாராட்டு தெரிவித்திருந்தனர். அப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கும் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
சூரி, யோகிபாபுவுக்கும் முன்னதாக தமிழ் சினிமாவில் தன் நகைச்சுவைக்கென தனி பாதையை போட்டு வைத்தவர் வடிவேலு. அவர் கடந்த சில வருடங்களில் அதிகப் படங்களில் நடிக்கவில்லை என்றாலும் பல்வேறு மீம்ஸ்களில் அவர்தான் கதாநாயகன். சமீபத்தில் வெளிவந்த 'மாமன்னன்' படத்தில் வடிவேலு ஏற்று நடித்த கதாபாத்திரம் அவருக்குள் ஒளிந்து கிடந்த குணச்சித்திர நடிகரை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தது. அவரா இவர் என ஆச்சரியப்படும் அளவிற்கு நடித்து ரசிகர்களின் பாராட்டுக்களைப் பெற்றுள்ளார்.
காமெடி நடிகராக இருந்து கதாநாயகனாக உயர்ந்த சந்தானம் கூட கடந்த வருடம் வெளிவந்த 'குலு குலு' படத்தில் சீரியசான கதாபாத்திரத்தில்தான் நடித்திருந்தார். ஆனால், அந்தப் படம் ரசிகர்களின் மனதில் இடம் பிடிக்காமல் போனது.