நீண்ட இடைவெளிக்குப் பின் டிவி பக்கம் வந்த ரோஜா | சென்னையில் இன்று புதிதாகத் திறக்கப்பட்ட 2 தியேட்டர்கள் | தமிழ் சினிமாவின் 3 மாதங்கள்…. வசூல் 300 கோடி மட்டுமே…. | இயக்குனர் மணிகண்டன் ஏன் பேசவில்லை | கர படத்தை தமிழகத்தில் வெளியிடும் ரெட் ஜெயன்ட் நிறுவனம் | பாய்ஸ் படத்தை ரீ ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் திட்டம் | ரசிங்க, விமர்சனம் செய்யாதீங்க : திஷா பதானி | ‛சிறை' அனிஷ்மாவின் மூன்றாவது தமிழ் படம் | எனக்கு கிடைத்த இரண்டு சகோதரர்கள் : பவன் கல்யாண் மனைவி நெகிழ்ச்சி | ரசிகர்களை உற்சாகப்படுத்த தியேட்டர்களில் வெளியாகும் திரிஷ்யம் 2 |

இந்த ஆண்டு தீபாவளிக்கு ரஜினி, கமல், விஜய், அஜித், விக்ரம், சூர்யா, சிம்பு, தனுஷ், சிவகார்த்திகேயன், விஜய்சேதுபதி போன்ற முன்னணி நடிகர்கள் படங்கள் வரவில்லை. மாரி செல்வராஜ் இயக்கத்தில் விக்ரம் மகன் துருவ் நடித்த பைசன், பிரதீப் ரங்கநாதனின் டியூட், ஹரிஷ் கல்யாணின் டீசல் போன்ற 3 பெயர் சொல்லும் படங்கள் வருகின்றன.
பிரதீப் ரங்கநாதனின் இன்னொரு படமான எல்ஐகே வராது என்று அதிகாரப்பூர்வமாக சொல்லப்படவில்லை. இந்த படங்கள் தவிர, புதுமுகங்கள் நடித்த பூகம்பம், கம்பி கட்டின கதை ஆகிய படங்கள் ரிலீஸ் என்று அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், தீபாவளி ரேசில் குதிப்பதாக இன்னொரு படக்குழு அறிவித்துள்ளது. படத்தின் தலைப்பு ‛கேம் ஆப் லோன்ஸ்'. நிவாஸ் ஆதித்தன், அபிநய், எஸ்தர் உள்ளிட்டோர் நடிக்க, அபிஷேக் ஸெல்லி இயக்கி இருக்கிறார். ஆன்லைன் கேம், லோன் மோசடி பாதிப்புகளை மையமாக வைத்து சைக்கலாஜிக்கல் திரில்லராக உருவாகி உள்ளது. 90 நிமிடங்கள் மட்டுமே ஓடும் இந்த படம் ஒரேநாளில் ஒருவன் சந்திக்கும் பிரச்னைகளை சொல்கிறது.
இந்த தீபாவளிக்கு தங்களுக்கு பிடித்த ஸ்டார் படங்கள், பெரிய பட்ஜெட் படங்கள், பான் இந்தியா படங்கள் வராதததால் ரசிகர்கள் ஏமாற்றத்தில் உள்ளனர்.