'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
பிக்பாஸ் நிகழ்ச்சி சமீபத்தில் முடிவடைந்தது. இதில் ராஜூ டைட்டில் வென்றார். பிரியங்காவும், பாவனியும் இரண்டாவது, 3வது இடத்துக்கு வந்தனர். பொதுவாக பிக்பாஸ் இறுதி போட்டிக்கு முன்னாள் டைட்டில் வின்னர்கள் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்படுவது வழக்கம். ஆனால் இந்த முறை இறுதி போட்டிக்கு முன்னாள் டைட்டில் வின்னர் ஆரி அர்ஜூனன் அழைக்கப்படவில்லை.
இதுகுறித்து அவர் தனது வருத்தத்தை பதிவு செய்திருக்கிறார். அவர் கூறியிருப்பதாவது: பிக்பாஸ் சீசன் 5 கிராண்ட் பினாலேவில் கலந்து கொள்ள வேண்டும் என்று மிகவும் ஆசையுடனும், ஆர்வத்துடனும் இருந்தேன். கமல்ஹாசன் மற்றும் இதர போட்டியாளர்களை சந்திக்க வேண்டும் என்று ஆவலுடன் இருந்தேன். ஆனால் துரதிர்ஷ்டவசமாக எனக்கு பிக்பாஸ் கிராண்ட் பினாலே நிகழ்ச்சிக்கு அழைப்பு வரவில்லை. என்கிறார்.
மேலும் இந்த சீசனில் கலந்துகொண்ட போட்டியாளர்களில் ஒருவரான இமான் அண்ணாச்சியும் இறுதி நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.