டேட்டிங் ஆப் சிக்கல்களை பேசவரும் 'நீ பாரெவர்' | மலையாள இயக்குனர் மீது பாலியல் புகார்: நடிகை கைது | புராணப்படத்தில் நடிக்கும் சமுத்திரகனி | 'ஹரிஹர வீர மல்லு': அவுரங்கசீப் கேரக்டரை மாற்றிய இயக்குனர் | பிளாஷ்பேக்: 3டி படத்தில் நடிக்க மறுத்த ரஜினிகாந்த் | பிளாஷ்பேக்: பெரும் தோல்வி அடைந்த பிரம்மாண்ட படம் | 'கேம் சேஞ்ஜர்' கமெண்ட்: மன்னிப்பு கேட்ட தயாரிப்பாளர் | 'கட்டா குஸ்தி 2' படத்தில் ஐஸ்வர்ய லட்சுமி இருக்கிறாரா? | கண்ணப்பா டீமுக்கும், ஹீரோயினுக்கும் என்ன பிரச்னை | நான் அடிக்கடி ரசிக்கும் காமெடி எது தெரியுமா? ஆர்.கே. செல்வமணி |
தமிழ் சினிமாவில் ஜோக்கர் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ரம்யா பாண்டியன். திரைத்துறைக்குள் வந்து நீண்டகாலம் ஆகிவிட்ட போதும் அவர் முன்னணி கதாநாயகி பட்டியலில் இடம் பிடிக்கவில்லை. ஆனால், அதேசமயம் சமூக வலைதளங்களில் அவர் வெளியிடும் போட்டோஷூட்டுகள் முன்னணி கதாநாயகிகளுக்கே டப் கொடுக்கும் வகையில் அவருக்கு ரசிகர்களை பெற்று தந்துள்ளது.
திரைபிரபலங்கள் முதல் பலரும் அவருடைய போட்டோஷூட்டுக்கு ரசிகர்களாக உள்ளனர். அதிலும், ரம்யா பாண்டியன் புடவையில் வெளியிட்ட போட்டோஷூட் தான் இன்று பல சின்னத்திரை பிரபலங்களில் பார்முலாவாக வொர்க் அவுட் ஆகி வருகிறது. தற்போது மலையாள சூப்பர் ஸ்டாருடன் பிசியாக நடித்து கொண்டிருக்கும் ரம்யா பாண்டியன், தமிழிலும் இடும்பன்காரி என்ற படத்தில் நடித்து வருகிறார். அவர் தற்போது நீண்ட நாட்களுக்கு பிறகு புடவையில் போட்டோஷூட் ஒன்றை வெளியிட்டுள்ளார். ரம்யாவின் நெளிவு சுழிவுகளில் சிக்கித் தவிக்கும் நெட்டிசன்கள் காதல் கீதங்களை இசைக்க தொடங்கிவிட்டனர்.