''நான் அதிர்ஷ்டசாலி'': நல்ல நண்பராக மணிகண்டன் கிடைத்த மகிழ்ச்சியில் ஷான்வி | 'கேம் சேஞ்சர்'--ல் விட்டதை 'பெத்தி'யில் பிடித்த ராம் சரண் | தயாரிப்பாளர் எம்.ராமநாதன் காலமானார் | குட் பேட் அக்லி - எந்த விழாவும் இல்லை, எந்த சந்திப்பும் இல்லை | ஆரம்பித்த இடத்திற்கே மீண்டும் வந்துள்ள ஹரி | மாரீசன் படத்தில் கோவை சரளா | உங்கள் ஊகங்களை நிறுத்துங்கள்: ரசிகருக்கு அட்வைஸ் செய்த மாளவிகா மோகனன் | 'சந்தோஷ்' படத்தை வெளியில் திரையிடுவேன் : பா ரஞ்சித் அடாவடி | பிளாஷ்பேக்: பைந்தமிழ் கற்பதில் தாமதம்; பட வாய்ப்பை இழந்த நடிகை பண்டரிபாய் | மே 16ல் ரீ-ரிலீஸாகும் ஆட்டோகிராப் |
தமிழ் சின்னத்திரை ரசிகர்களிடையே புதுமையான நிகழ்ச்சிகளின் மூலம் ஜீ தமிழ் தொலைக்காட்சி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த சேனலில், குழந்தைகளுக்கான பிரத்யேக நிகழ்ச்சியாக 'ஜூனியர் சூப்பர் ஸ்டார் சீசன் 4' நிகழ்ச்சி ஒளிபரப்பாக தொடங்கியுள்ளது. கடந்த ஜனவரி 15 ஆம் தேதி ஒளிபரப்பான அந்நிகழ்ச்சியின் எபிசோடில் இரு சிறுவர்கள் இணைந்து, வடிவேலுவின் இம்சை அரசன் பாணியில் நாட்டு நடப்பை கிண்டல் செய்து நடித்திருந்தார்கள். அது தற்கால அரசியல் சூழலோடு ஒத்துப்போகும் வகையில் அமைந்திருந்தது. இதனையடுத்து பாரதிய ஜனதா கட்சியினர், அந்நிகழ்ச்சிக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து பாஜக கட்சி சார்பில், ஜீ தமிழ் தொலைக்காட்சிக்கு எழுதிய கடிதத்தில், 'நிகழ்ச்சியின் குறிப்பிட்ட அந்த பகுதியில் நடித்திருந்த சிறுவர்களுக்கு அந்த காட்சியின் தன்மையையோ அல்லது உண்மை நிலையையோ அறிந்து கொள்ளும் பக்குவம் கிடையாது. அவர்கள் குழந்தைகள். ஆனால், காமெடி என்ற பெயரில் குழந்தைகள் மீது அந்த கான்செப்ட் திணிக்கப்பட்டுள்ளது. அந்த காட்சி முழுவதிலுமே நடுவர்களும், தொகுப்பாளர்களும் சிறுவர்களின் செயலை ஊக்கப்படுத்தும் வகையில் நடந்து கொண்டனர். இது, அந்த சேனலை பற்றியும் தமிழ்நாடு பற்றியும் தவறான கண்ணோட்டத்தை தேசிய அளவில் உருவாக்குகிறது.
எனவே, இது தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், அந்த சேனல், நிகழ்ச்சி தயாரிப்பாளர், நடுவர்கள், தொகுப்பாளர்கள் என அனைவரும் பொதுவில் மன்னிப்பு கேட்க வேண்டும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.