‛தளபதி கச்சேரி' பிளாஸ்ட் : ‛ஜனநாயகன்' முதல் பாடல் வெளியீடு | கோவா திரைப்பட விழாவிற்கு செல்லும் ‛அமரன்' | ஜெயிலர் 2 படத்தை பாலகிருஷ்ணா எதனால் நிராகரித்தார்? | சைபர் கிரைம் மோசடி - ருக்மணி வசந்த் எச்சரிக்கை செய்தி | 2026 பிப்ரவரியில் திரைக்கு வரும் வெங்கட் பிரபுவின் பார்ட்டி | கோவா சர்வதேச திரைப்பட விழாவில் ரஜினிக்கு பாராட்டு விழா | உருவக்கேலியை ஏற்க முடியாது ; ஆதரித்தவர்களுக்கு நன்றி : கவுரி கஷன் அறிக்கை | பிளாஷ்பேக் : மலையாள சினிமாவை கதற வைத்த மோனிஷா உன்னி | ரிலீசுக்காக 5 வருடங்கள் காத்திருந்த படம் | லட்சுமி மேனன் மீதான ஆள்கடத்தல் வழக்கு தள்ளுபடி |

தமிழை போலவே மலையாளத்திலும் பிக்பாஸ் நிகழ்ச்சி மிகப்பெரிய வரவேற்பை பெற்று சென்று கொண்டிருக்கிறது. கடந்த ஆறு சீசன்களாக இந்த நிகழ்ச்சியை நடிகர் மோகன்லால் தொகுத்து வழங்கி வருகிறார். தமிழில் கமல் எப்படியோ அதுபோல மலையாள பிக்பாஸின் முகமாகவே மோகன்லால் மாறிவிட்டார். அந்த வகையில் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி சமீபத்தில் நூறாவது நாளை தொட்டு கடந்த ஞாயிறு அன்று அதன் பைனலும் நடைபெற்றது. இந்த ஆறாவது சீசனின் வெற்றியாளராக ஜின்டோ என்பவர் தேர்வு செய்யப்பட்டார்.
வெற்றியாளரை அறிவித்த பின்னர் மோகன்லால் பார்வையாளர்களிடம் பேசும்போது, “நீங்கள் ஏன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறீர்கள் என மக்கள் என்னிடம் கேட்கிறார்கள். நான் என்னுடைய படங்களில் விதவிதமான கதாபாத்திரங்களில் நடிப்பதன் மூலமாக உங்களை கவர்வதற்கு நிறைய வாய்ப்பு இருக்கிறது. ஆனால் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் மட்டும் தான் நான் மோகன்லாலாகவே உங்களை கவர்ந்து பொழுதுபோக்க செய்ய வேண்டிய சவால் இருக்கிறது. அதனாலேயே இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது எனக்கு பிடித்திருக்கிறது” என்று நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.