சாய் பல்லவியின் ‛ஏக் தீன்' ஹிந்தி படம் டீசருடன் ரிலீஸ் தேதி அறிவிப்பு | சிறிய படங்களை கண்டு கொள்ளாத ஓடிடி நிறுவனங்கள் : வசந்தபாலன் காட்டம் | பாலிவுட்டில் பரவும் தனுஷ், மிருணாள் தாகூர் திருமணத் தகவல் | கமலை சந்தித்து ஆசி வாங்கிய ஊர்வசியின் மகள் | திரிஷ்யம் 3 படத்துடன் மோதும் வாழ 2 | மரகத நாணயம் 2 படத்தில் பிரியா பவானி சங்கர் | விஜய் படம் எப்ப ரிலீஸ் : அஜித் படம் அறிவிப்பு எப்ப வரும் | தலைப்பு ‛தி மம்மி ரிட்டர்ன்ஸ்' : ஆனா பேய் படமில்லையாம் | விஜய் சேதுபதி கைவசம் வரிசை கட்டும் படங்கள் | பொங்கல் படங்களில் வின்னர் எது? : 100கோடியை தாண்டுமா பராசக்தி |

நடிகர் சிரஞ்சீவியின் முன்னாள் மருமகனான சிரிஷ் பரத்வாஜ் என்பவர் உடல்நலக் குறைவால் நேற்று காலமானார். அவருக்கு வயது 39. சிரஞ்சீவியின் இரண்டு மகள்களில் ஒருவரான ஸ்ரீஜா கடந்த 2007ல் தனது குடும்பத்தினரின் எதிர்ப்பையும் மீறி சிரிஷ் பரத்வாஜ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஒரு கட்டத்தில் தங்களது உயிருக்கு தங்கள் பெற்றோரால் ஆபத்து இருக்கிறது என புகார் கொடுக்கும் அளவிற்கு ஸ்ரீஜா சென்றார். ஆனால் அடுத்தடுத்த சில வருடங்களில் ஸ்ரீஜாவுக்கும், சிரிஷுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவரிடம் இருந்து பிரிந்து பெற்றோரிடம் வந்து விட்டார் ஸ்ரீஜா.
அதனைத் தொடர்ந்து கடந்த 2016ல் ஸ்ரீஜாவுக்கு பெங்களூரைச் சேர்ந்த தொழிலதிபரின் மகனான கல்யாண் தேவ் என்பவருடன் இரண்டாவது திருமணம் நடைபெற்றது. அதே சமயம் கடந்த இரண்டு வருடங்களாக இருவரும் பிரிந்து வாழ்கிறார்கள் என்றும் சொல்லப்பட்டு வருகிறது.
அதேபோல சிரிஷ் பரத்வாஜும், இன்னொரு திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் தான் நுரையீரல் சம்பந்தப்பட்ட உடல்நல கோளாறு காரணமாக ஐதராபாத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்ட சிரிஷ் பரத்வாஜ் சிகிச்சை பலனின்றி நேற்று காலமானார். இந்த தகவலை சிரிஷின் தோழியான நடிகை ஸ்ரீ ரெட்டி பகிர்ந்துகொண்டு தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.