ஸ்பெயின் கால்பந்தாட்ட மைதானத்தில் வெளியிடப்பட்ட டொவினோ தாமஸ், நஸ்ரியா பட டைட்டில் | 'வாழ' இயக்குனரின் இயக்கத்தில் மஞ்சு வாரியர் நடிக்கும் 'ஹேப்பி லூப்' | ‛கிருஷ்ணாவதாரம்' படத்திற்கு உ.பி.,யில் வரிவிலக்கு அளித்த முதல்வர் யோகி ஆதித்யநாத் | காஞ்சனா 4 படத்தின் அதிரடி போஸ்டர் வெளியானது | மீண்டும் தெலுங்கு படத்தில் யோகி பாபு | ராமாயணா படத்தில் சாய் பல்லவியின் சம்பளம் எவ்வளவு? | மே 18ல் ராம்சரணின் 'பெத்தி' டிரைலர் வெளியீடு | ஏமாற்றம் தந்த ஏப்ரல் மாதம் | 'எல்ஐகே' 200 கோடி வசூலிக்கும் என எதிர்பார்த்தேன் : விக்னேஷ் சிவன் ஆதங்கம் | மீண்டும் வருகிறது 'மணி ஹெய்ஸ்ட்' |

தமிழில் வெளிவந்த தெய்வ திருமகள் படத்தில் விக்ரமின் மகளாக குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் சாரா அர்ஜூன். பின்னர் பொன்னியின் செல்வன் படத்தில் இளம் வயது ஐஸ்வர்யா ராயாக நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் .
சமீபத்தில் ஹிந்தியில் ஆதித்யா தர் இயக்கத்தில் ரன்வீர் சிங் நடிப்பில் வெளியான படம் ' தூரான்தர்' . இதில் கதாநாயகியாக நடித்து இன்னும் பிரபலமானார். தற்போது தெலுங்கில் ஒரு படத்தில் நாயகியாக நடித்துள்ளார். அடுத்து தெலுங்கில் பாபி கொல்லி இயக்கத்தில் சிரஞ்சீவியின் 158வது படத்தில் நடிக்கவுள்ளார். இதில் கதாநாயகியாக பிரியாமணி நடிக்கவுள்ளார். இதில் இடம்பெறவுள்ள சிரஞ்சீவியின் மகள் கதாபாத்திரத்தில் நடிக்க கிர்த்தி ஷெட்டி உடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. ஆனால் அது கைகூடவில்லை. இப்போது இதில் சாரா அர்ஜுன் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.




