‛திரிஷ்யம் 3' படத்தின் வியாபாரம் குறித்து புதிய அப்டேட்! | வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படத்தின் படப்பிடிப்பு எப்போது? | மீண்டும் சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கிறாரா? | மகுடம் படத்தின் அப்டேட் தந்த விஷால் | பராசக்தி படத்திற்காக சிறப்பு கண்காட்சி | ரஜினி பிறந்தநாளில் “படையப்பா” ரிட்டர்ன்ஸ் | இண்டிகோ விவகாரத்தில் விமான ஊழியர்களை திட்டாதீர்கள் : சோனு சூட் ஆதரவு குரல் | பிரித்விராஜூக்கு தாத்தாவாக நடிக்கும் மோகன்லால் | ஜப்பானில் ரசிகர்களுடன் பாகுபலி தி எபிக் படத்தை பார்த்து ரசித்த பிரபாஸ் | வருட இறுதியில் நிவின்பாலிக்கு டபுள் ஜாக்பாட் |

ஆர்ஆர்ஆர் படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் ராஜமவுலி, நடிகர் மகேஷ்பாபுவை வைத்து தனது அடுத்த படத்தை இயக்க உள்ளார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் கடந்த வருடமே வெளியாகிவிட்டது. இந்தப் படம் காடுகளில் நடக்கும் சாகசங்களை மையப்படுத்தி ஒரு பிக்ஷன் படமாக உருவாக இருக்கிறது என்று படத்தின் கதாசிரியரும், இயக்குனர் ராஜமவுலியின் தந்தையுமான விஜயேந்திர பிரசாத் ஏற்கனவே கூறியுள்ளார்.
இந்த நிலையில் ராஜமவுலி புகழ்பெற்ற ஆப்பிரிக்க நாவலாசிரியரான வில்பர் ஸ்மித் எழுதிய டிரையம்ப் ஆப் தி சன் மற்றும் கிங் ஆப் கிங்ஸ் என்கிற இரண்டு நாவல்களின் உரிமையை வாங்கியுள்ளார் என்கிற தகவல் வெளியாகி உள்ளது.
ஏற்கனவே இந்த படத்தின் ஸ்கிரிப்ட் வேலைகள் முடிந்து விட்டது என விஜயேந்திர பிரசாத் கூறியுள்ள நிலையில் இயக்குனர் ராஜமவுலி இந்த இரண்டு நாவல்களை வாங்கியுள்ளது மகேஷ்பாபு நடிக்கும் படத்திற்காகவா அல்லது எதற்காக என்கிற கேள்விகளை ரசிகர்கள் மத்தியில் எழுப்பி உள்ளது. அதேசமயம் கதை வேலைகள் முடிந்தாலும் ஆப்பிரிக்க காடுகளில் காட்சிகளை படமாக்குவதற்கு ஒரு விஷன் தேவைப்படுவதால் இந்த நாவல்களை ராஜமவுலி வாங்கி இருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.