ஹிந்தி படத்திற்காக டில்லி சென்ற தனுஷ் | கமல் படத்திற்கு முதன்முறையாக இசையமைக்கும் ஜி.வி.பிரகாஷ் | ஜீனி படத்தின் புதிய அப்டேட் | சூர்யா பட மூலம் மீண்டும் தமிழுக்கு வரும் மலையாள நடிகர் | 2-வது திருமணம் செய்யும் நாக சைதன்யாவுக்கு நாகார்ஜுனா அளிக்கும் விலை உயர்ந்த பரிசு | நான் சினிமாவில் இருப்பதற்கு என் மனைவி தான் காரணம் - சிவகார்த்திகேயன் | விடாமுயற்சிக்கும், கேம் சேஞ்சருக்கும் இடையே போட்டியா ?- எஸ்.ஜே.சூர்யா | ஸ்ரீலீலாவை 'ஓவர் டேக்' செய்த ரஷ்மிகா மந்தனா | பிளாஷ்பேக் : மலையாள சினிமாவின் தந்தையை விரட்டிய தமிழ் சினிமா | பிளாஷ்பேக் : நாடகத்தையும், சினிமாவையும் இணைத்த கோமல் சாமிநாதன் |
இந்தியத் திரையுலகத்தில் ஹிந்தித் திரையுலகத்திற்கு அடுத்து அதிக வருவாயை ஈட்டும் திரையுலகம் தெலுங்குத் திரையுலகம். 90கள் வரையிலும் சென்னையில்தான் தெலுங்குப் படங்களின் படப்பிடிப்புகள் நடைபெற்று வந்தது. அதுவரையில் தெலுங்கு நடிகர்கள், நடிகைகள் சென்னையில் உள்ள அவர்களது வீட்டில்தான் வசித்து வந்தனர். மகேஷ்பாபு, அல்லு அர்ஜுன் என பலரும் இங்குதான் படித்து வளர்ந்தனர்.
என்.டி.ராமராவ் ஒன்றுபட்ட ஆந்திராவின் முதல்வராகப் பதவியேற்ற உடன் தெலுங்குத் திரையுலகத்தை ஐதராபாத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கேயே படப்பிடிப்பு நடக்கும் தெலுங்குப் படங்களுக்கு பல சலுகைகளை வழங்கினார். கொஞ்சம் கொஞ்சமாக ஒட்டு மொத்த தெலுங்குத் திரையுலகமும் ஐதராபாத் சென்றுவிட்டது. ஒரு சிலர் மட்டுமே இன்னமும் இங்கேயே உள்ளனர்.
ஆந்திர மாநிலத்தை ஆந்திரா, தெலங்கானா என பிரித்தனர். இருந்தாலும் ஐதராபாத்தை விட்டு தெலுங்குத் திரையுலகினர் வேறு எங்கும் நகரவில்லை. தற்போது ஆந்திராவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. அமராவதி நகரை ஆந்திராவின் தலைநகராக உருவாக்க பல ஆயிரம் கோடி ரூபாயை செலவிட உள்ளார்கள். அதனால், அமராவதி அதன் அருகில் உள்ள விஜயவாடா ஆகியவற்றை தெலுங்குப் படங்களுக்கான படப்பிடிப்பு இடங்களான மாற்றும் வேலைகளும் நடக்கும் எனத் தெரிகிறது.
தற்போது ஆந்திராவின் துணை முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள பவன் கல்யாண் இன்னும் மூன்று படங்களை முடித்துக் கொடுக்க வேண்டியிருக்கிறது. “ஓஜி, உஸ்தாத் பகத் சிங், ஹரிஹர வீர மல்லு” ஆகிய படங்களின் படப்பிடிப்பை அவர் இன்னும் முடிக்கவில்லை. புதிதாகப் பொறுப்பேற்றுள்ளதால் அவற்றை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளார். இன்னும் ஓரிரு மாதங்களுக்குப் பிறகே அப்படங்களின் படப்பிடிப்புகளில் அவர் மீண்டும் கலந்து கொள்வார் எனத் தெரிகிறது.
அதற்குப் பிறகும் அந்தப் படங்களின் படப்பிடிப்பை அமராவதி அல்லது விஜயவாடா ஆகிய இடங்களில் அரங்கம் நிர்மாணித்து படப்பிடிப்பு நடத்த கேட்டுக் கொள்வார் என்று டோலிவுட்டில் தகவல் வெளியாகி உள்ளது. மேலும், ஆந்திராவிலும் திரைப்படத் தொழில் வளர அவர் முயற்சிப்பார் என்கிறார்கள். அங்கும் படப்பிடிப்பு நடத்தினால் சலுகைகள் வழங்கும் முடிவை எடுப்பார்கள் எனத் தெரிகிறது.