காதலருடன் ஹூமா குரேஷிக்கு நிச்சயதார்த்தம் நடந்ததா? | ரோபோ சங்கர் நினைவாக குபேரர் கோவிலுக்கு ரோபோ யானையை பரிசளித்த நடிகர் டிங்கு! | தீபாவளிக்கு 'கருப்பு' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகிறது! | ஹாட்ரிக் அடிக்கிறாரா பிரதீப் ரங்கநாதன் | ராஜமவுலி தயாரிப்பில் பஹத் பாசில் புதிய பட படப்பிடிப்பு துவங்கியது! | இசைத்துறையில் சாதிக்க என்ன செய்ய வேண்டும்? அழகாக சொல்கிறார் அனுராதா ஸ்ரீராம் | 'காந்தாரா சாப்டர் 1' ஹிட்: ஆன்மிக பயணம் செல்லும் ரிஷப் ஷெட்டி | ரஜினி பிறந்தநாளில் பிரமாண்டமாக ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை! | இயக்குனர் கென் கருணாஸ் உடன் இணைந்த ஜி.வி. பிரகாஷ்! | 'பள்ளிச்சட்டம்பி' படப்பிடிப்பை நிறைவு செய்த கயாடு லோஹர் |
மலையாள நடிகை பார்வதி நடிக்க வந்து 15 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டாலும் குறைவான எண்ணிக்கையிலான படங்களில் மட்டுமே நடித்துள்ளார். காரணம் நடிப்பிற்கு சவால் விடும் கதாபாத்திரங்களையும் பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் படங்களையும் மட்டுமே அவர் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் விரைவில் வெளியாக இருக்கும் ‛உள்ளொழுக்கு' என்கிற படத்தில் ரசிகர்களுக்கே அவ்வளவு அறிமுகம் இல்லாத ஒரு சாதாரண நகைச்சுவை நடிகருக்கு ஜோடியாக நடித்துள்ளார் பார்வதி. இன்னொரு பக்கம் விக்ரம் உடன் தங்கலான் படத்திலும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
சமீபத்திய பேட்டி ஒன்றில் அவர் கூறும்போது, “தன்னைத் தேடி வரும் புதிய இயக்குனர்கள் கதாநாயகியை மையப்படுத்திய கதைகளை கூறி இந்த படத்தில் உங்களுக்குத் தான் மேடம் முக்கியத்துவம் என்றும் சொல்கிறார்கள். ஆனால் தயவுசெய்து பொதுவெளியில் இது பெண்களை மையப்படுத்திய படம் என்று மட்டும் சொல்லி விடாதீர்கள், அந்த வார்த்தையை கேட்டாலே தயாரிப்பாளர்கள் டென்ஷன் ஆகிறார்கள் என்று ஒரு வேண்டுகோளையும் வைக்கிறார்கள். காரணம் பெண்களை மையப்படுத்திய படங்கள் என்றால் வியாபார ரீதியாக பல தடங்கல்களை அவர்கள் சந்திக்க வேண்டி இருக்கிறது. குறிப்பாக ஓடிடி நிறுவனங்கள் இப்படி கதாநாயகிகளை மையப்படுத்திய படங்கள் என்றால் வாங்குவதற்கு தயங்குகின்றனவாம். இதனால் தான் இயக்குனர்கள் என்னிடம் இப்படி ஒரு கோரிக்கையை வைக்கிறார்கள். நானும் அதை பெரிதுபடுத்தாமல், அவர்கள் பக்கம் நின்று யோசித்து அவர்களை உற்சாகப்படுத்தும் விதமாகவே நடந்து கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.