இப்போதைக்கு நான் சாக விரும்பவில்லை : விரக்தியில் பிரபல பாடகர் | நாகசைதன்யா நடிக்கும் புதிய வெப்சீரிஸ் ‛மாய சபா' | தொடரும் வில்லத்தனம் : வெளியான மம்முட்டியின் கலம்காவல் இரண்டாவது லுக் | மோகன்லாலுக்கு பரிசாக கால்பந்து வீரர் மெஸ்ஸி கையெழுத்திட்டு அனுப்பிய ஜெர்ஸி | மலையாள வில்லன் நடிகர் மீதான போதை வழக்கில் போலீசாருக்கு புதிய சிக்கல் | மாரி செல்வராஜ் - தனுஷ் கூட்டணியில் ஏஆர் ரஹ்மான் | குட் பேட் அக்லி 11 நாள் வசூல் முழு விவரம் | காதலருடன் (?) திருப்பதியில் தரிசனம் செய்த சமந்தா | பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி |
தமிழை போலவே மலையாளத்திலும் பிக்பாஸ் நிகழ்ச்சி மிகப்பெரிய வரவேற்பை பெற்று சென்று கொண்டிருக்கிறது. கடந்த ஆறு சீசன்களாக இந்த நிகழ்ச்சியை நடிகர் மோகன்லால் தொகுத்து வழங்கி வருகிறார். தமிழில் கமல் எப்படியோ அதுபோல மலையாள பிக்பாஸின் முகமாகவே மோகன்லால் மாறிவிட்டார். அந்த வகையில் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி சமீபத்தில் நூறாவது நாளை தொட்டு கடந்த ஞாயிறு அன்று அதன் பைனலும் நடைபெற்றது. இந்த ஆறாவது சீசனின் வெற்றியாளராக ஜின்டோ என்பவர் தேர்வு செய்யப்பட்டார்.
வெற்றியாளரை அறிவித்த பின்னர் மோகன்லால் பார்வையாளர்களிடம் பேசும்போது, “நீங்கள் ஏன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறீர்கள் என மக்கள் என்னிடம் கேட்கிறார்கள். நான் என்னுடைய படங்களில் விதவிதமான கதாபாத்திரங்களில் நடிப்பதன் மூலமாக உங்களை கவர்வதற்கு நிறைய வாய்ப்பு இருக்கிறது. ஆனால் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் மட்டும் தான் நான் மோகன்லாலாகவே உங்களை கவர்ந்து பொழுதுபோக்க செய்ய வேண்டிய சவால் இருக்கிறது. அதனாலேயே இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது எனக்கு பிடித்திருக்கிறது” என்று நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.