பிரபாஸ் படத்திலிருந்து நீக்கப்பட்டாரா ராஷ்மிகா? | விஜய் சேதுபதி படத்தில் தபு : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | கண்ணப்பா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | 'ரெட்ரோ'வில் 90களின் காதல் கதை : கார்த்திக் சுப்பராஜ் தகவல் | பிளாஷ்பேக் : இளையராஜாவின் பாடலுக்காக உருவான படம் | சினிமா சங்கப் பிரச்னைகளில் அரசு தலையிட வேண்டும் : ஆர்கே செல்வமணி கோரிக்கை | உறுதியானது 'லியோ - குட் பேட் அக்லி' ஒற்றுமை | தனுஷ் - மாரி செல்வராஜ் கூட்டணி : மாறிய தயாரிப்பு நிறுவனம் | ஷங்கர் வழியில் எக்ஸ் தளத்தை 'ஆப்' செய்த ஏஆர் முருகதாஸ் | ஆளே இல்லாத வீட்டிற்கு ஒரு லட்சம் கரண்ட் பில் : கங்கனா ஏற்படுத்திய பரபரப்பு |
பிக்பாஸ் சீசன் 5 தொடங்கி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இந்த சீசனில் முக்கிய போட்டியாளர்களில் ஒருவராக திரைபிரபலமான பவானி ரெட்டி பார்க்கப்படுகிறார். பிக்பாஸ் நிகழ்ச்சி தொடக்க நாள் அன்றும், 'கதை சொல்லட்டுமா' டாஸ்கின் போதும் ரசிகர்களை தனது சோக கதையால் கண்ணீர் சிந்த வைத்தார் பவானி. காரணம் பவானி ரெட்டி காதலித்து திருமணம் செய்து கொண்ட அவரது கணவர், திருமணமான எட்டே மாதங்களில் தற்கொலை செய்து இறந்து விட்டார். இதற்கு பவானி ரெட்டியின் தவறான நடத்தையே காரணம் என இன்றளவும் வதந்திகள் பரவி வருகிறது.
இதை மறுத்து பேசிய பவானி கணவனின் இறப்பு குறித்தும், அவரை பிரிந்து தான் வாடுவதும் குறித்தும் உருக்கமாக பதிவு செய்தார். இருந்தாலும் இணையத்தில் நெட்டிசன்கள் மீண்டும் வதந்திகளை கிளப்பி வந்தனர். மேலும் பவானிக்கு இரண்டாவது திருமணம் நடந்துவிட்டது எனவும் சில புகைப்படங்களை பரப்பி வருகின்றனர். இந்நிலையில் பவானி ரெட்டியின் இன்ஸ்டாகிராம் அக்கவுண்டை ஹேண்டில் செய்து வரும் அவரது சகோதரி இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சமீபத்தில் ஒரு பதிவை வெளியிட்டார்.
அந்த பதிவில், 'பவானியும் அவரது கணவரும் இணைந்து மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர். எதிர்பாராதவிதமாக பவானி கணவரை இழந்து விட்டார். தனது கணவரின் நினைவால் தற்போது தவித்து வருகிறார். சில காலங்களுக்கு முன் வேறு ஒருவரை விரும்பினார். அவருடன் சேர்த்து வைக்க ஆசைப்பட்டோம். ஆனால், அவருடன் பவானிக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் பரஸ்பரத்துடன் பிரிந்து விட்டனர்' என மிக தெளிவாக அந்த பதிவில் கூறியுள்ளார்.