லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
மாடலாக தனது திரையுலக பயணத்தை ஆரம்பித்த வித்யா ப்ரதீப் சினிமாக்களில் சிறு சிறு வேடங்களில் மட்டுமே நடித்து வந்தார். அப்போது தான் சின்னத்திரை அவரை கதாநாயகியாக நடிக்க அன்புடன் வரவேற்றது. நாயகி என்னும் சீரியலில் ஹீரோயினாக அறிமுகமான வித்யா வெள்ளித்திரையில் தடம் படத்தில் முக்கியமான போலீஸ் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருந்தார். அதன் பின் வரிசையாக பட வாய்ப்புகள் வந்து குவிய சீரியலுக்கு முழுக்கு போட்டுவிட்டு சினிமாவில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார்.
சினிமாவில் தற்போது டாப் கியரில் பயணித்து கொண்டிருக்கும் வித்யா தனது சோஷியல் மீடியா ப்ரொபைலையும் ஆக்டிவாக வைத்திருக்கும் வகையில் போட்டோக்களை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் வெள்ளை முடியுடன் ஹாலிவுட் படத்தில் வரும் விட்ச் கெட்டப்பில் இருக்கும் வித்யாவின் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதை பார்க்கும் ரசிகர்கள் 'மார்லின் மன்றோ மாதிரி செக்ஸியா இருக்கீங்க' 'இது என்ன ஆயா கெட்டப்'? என ஏடாகூடமாக கமெண்ட்களில் அவரை காய்ச்சி எடுத்து வருகின்றனர்.