ஆமீர்கான் படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலகியது ஏன்? நாக சைதன்யா கொடுத்த விளக்கம் | நான் ஏன் தலைவன் ஆனேன்? கமல் சொன்ன விளக்கம்! | முருகன் ஆல்பத்தின் வசூலை திருச்செந்தூர் கோவிலுக்கு வழங்கும் தேவா! | விரைவில் சந்திக்கிறேன்- அடுத்த படத்தை அறிவிக்க போகிறாரா லெஜண்ட் சரவணன்? | தம் அடிக்கும் வீடியோவை வெளியிட்ட ஷில்பா மஞ்சுநாத்! | அஜய் தேவ்கனை சந்தித்த குஷ்பூ | ஜானி மாஸ்டருக்கு நன்றி சொன்ன ஜாக்குலின் பெர்னாண்டஸ் | போர்க்கப்பலை பார்வையிட்ட மோகன்லால் ; அதிகாரிகள் உற்சாக வரவேற்பு | அது என்னுடைய கார் அல்ல ; ஷாஜி கைலாஷ் விளக்கம் | 6 வருடமாக டார்ச்சர் கொடுத்த விமர்சகர் ; நித்யா மேனன் அதிர்ச்சி தகவல் |
விஜய் டிவி ரியாலிட்டி ஷோக்களில் பிக்பாஸ் மற்று குக் வித் கோமாளி நிகழ்ச்சிகள் தான் தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலேயே மிகவும் புகழ்பெற்ற நிகழ்ச்சிகளாக உள்ளது. அதுபோல அந்த ஷோக்களில் பங்குபெறும் நட்சத்திரங்களும் மிகவும் பிரபலமடைந்து அடுத்தடுத்த லெவலுக்கு சென்று விடுகின்றனர். அந்த வகையில் பிக்பாஸ் ரியோ ராஜ் மற்றும் குக் வித் கோமாளி பவித்ரா மக்களால் அதிகம் ரசிக்கப்படும் செலிபிரேட்டிகளாக உள்ளனர்.
ரியோ, சரவணன் மீனாட்சி தொடரில் நடித்ததுடன் தற்போது வெள்ளித்திரையிலும் கலக்கி வருகிறார். அவர் நடித்த பிளான் பண்ணி பண்ணுவோம் திரைப்படம் விரைவில் ரிலீஸாகவுள்ளது. பவித்ராவும் வரிசையாக படங்களில் கமிட்டாகி வருகிறார். சினிமா வாய்ப்பிற்கு முன்னால் இருவருமே ஆல்பம் மற்றும் குறும்படங்களில் நடித்து வந்தனர்.
இந்நிலையில் தற்போது மீண்டும் இருவரும் சேர்ந்து ஆல்பம் பாடல் ஒன்றில் பணியாற்றியுள்ளனர். 'கண்ணம்மா என்னம்மா' என்கிற இந்த ஆல்பத்தின் பாடல் வரிகள் கடந்த ஜீலை மாதம் வெளியிடப்பட்ட நிலையில் தற்போது மியூசிக் வீடியோ வரும் 14ம் தேதி ரிலீஸாகவுள்ளது. இதனை முன்னிட்டு மியூசிக் வீடியோவின் ப்ரோமோ வீடியோ வெளியிடப்பட்டு வைரலாகி வருகிறது.
ரியாலிட்டி ஷோக்களில் கலந்து கொண்ட பிறகு இருவரும் சேர்ந்து நடிக்கும் ஆல்பம் என்பதால் ரசிகர்களின் கவனமும் எதிர்பார்ப்பும் இந்த ஆல்பம் பாடலின் மீது அதிகரித்துள்ளது.