பூஜா ஹெக்டேவுக்கு என்னதான் ஆச்சு ? | ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கும் சூரி | அருண் பிரசாத், அர்ச்சனா திருமண நிச்சயதார்த்தம் நடந்தது | பாட்டி மறைவு : அல்லு அர்ஜூன் உருக்கம் | தெரு நாய் தொடர்பான விவாத நிகழ்ச்சி : மன்னிப்பு கேட்டார் படவா கோபி | டிசம்பரில் திரைக்கு வரும் வா வாத்தியார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | ராஜூ முருகனின் மை லார்ட் என்ன பேசுகிறது? | டிரைலர் உடன் புதிய ரிலீஸ் தேதியை அறிவித்த அதர்வாவின் தணல் படக்குழு! | 'குட்டி ஏஐ அனுஷ்கா' வீடியோ பகிர்ந்த அனுஷ்கா | வெளிநாடுகளில் 20 மில்லியன் டாலர் வசூலித்த 'கூலி' |
விஜய் சேதுபதி, தற்போது ஹிந்தியில் தயாராகும் வெப் தொடரில் நடித்து வருகிறார். இந்த வெப் தொடரை பிரபல பாலிவுட் இயக்குனர்களான ராஜ் மற்றும் டீகே இணைந்து இயக்குகின்றனர். இவர்கள் சர்ச்சையான பேமிலிமேன் தொடரை இயக்கியவர்கள். இந்த வெப் தொடரில் விஜய் சேதுபதியுடன் பாலிவுட் நடிகர் ஷாகித் கபூரும் இணைந்து நடிக்கிறார்.
இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த வெப் தொடரில் ஷாகித் கபூருக்கு ஜோடியாக ராஷி கண்ணா நடிக்கிறார். அதேபோல் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்கப்போவது யார் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவி வந்தது.
இந்நிலையில், அவருக்கு ஜோடியாக நடிக்க பிரபல தமிழ் நடிகை ரெஜினா கசன்ட்ரா நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். நடிகை ரெஜினா நடிக்கும் முதல் வெப் தொடர் இதுவாகும். நடிகர் விஜய் சேதுபதியும், ரெஜினாவும் ஏற்கனவே 'முகிழ்' என்கிற தமிழ் படத்தில் ஜோடியாக நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.