துல்கர் சல்மான் படத்தில் இணைந்த ஸ்ருதிஹாசன் | வதந்தி 2 வெப்சீரிஸில் இரண்டு நாயகிகள் | தர்பார் தோல்வி குறித்து ஓபன் ஆக பேசிய ஏ.ஆர்.முருகதாஸ் | தமிழில் ரீமேக் ஆகும் கன்னட படம் 'சூ ப்ரம் சோ' | சர்ச்சில் ரொமான்ஸ்: ஜான்வி கபூர் படத்திற்கு எதிர்ப்பு | பிளாஷ்பேக்: ரீ என்ட்ரி வாய்ப்புகளை மறுத்த சுவலட்சுமி | ‛கேங்ஸ்டர்' ஆக ‛லெஜண்ட்' சரவணன் | ஆண்ட்ரியா படத்தை பார்க்க நீதிபதிகள் முடிவு | சர்தார் 2 படத்தில் உள்ள சிக்கல் | பிளாஷ்பேக்: எழுத்தாளருக்கான தேசிய விருது பெற்ற முதல் நடிகை |
கடந்த 2105ம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான 'என்னை அறிந்தால்' படத்தில் வில்லனாக நடித்த அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்தவர் பார்வதி நாயர். அவரின் நடிப்புக்கு நல்ல வரவேற்பு இருந்தது. 'உத்தம வில்லன்', 'என்கிட்ட மோதாதே', 'நிமிர்', 'மாலை நேரத்து மயக்கம்' உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தற்போது வைபவ் நடிப்பில் உருவாகி வரும் 'ஆலம்பனா' படத்தில் நடித்து வருகிறார். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் பார்வதி நாயர், சினிமாவில் படவாய்ப்பை பெறவே தொடர்ந்து போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் பாரம்பரிய உடையில் மல்லிப்பூ வைத்து இருக்கும் அழகிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ள இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தை கலக்கி வருகிறது.