செப்., 19ல் ‛கிஸ்' ரிலீஸ் | டிரோல்களுக்கு ஜான்வி கபூர் கொடுத்த விளக்கம் | அழகுக்கு அனன்யா பாண்டே தரும் ‛டிப்ஸ்' | தமிழ் சினிமாவை அழிக்கும் நோய் : ஆர்கே செல்வமணி வேதனை | மீண்டும் ஹீரோவான 90ஸ் நாயகன் ஆக்ஷன் கிங் அர்ஜுன்! | ஐகோர்ட் உத்தரவு : ரவி மோகன் சொத்துக்களை முடக்க வாய்ப்பு | ‛தக் லைப்' தோல்வி கமலை பாதித்ததா... : ஸ்ருதிஹாசன் கொடுத்த பதில் | ஜெயிலர் 2 வில் இணைந்த சுராஜ் வெஞ்சாரமூடு | அக்டோபரில் துவங்குகிறது பிக்பாஸ் சீசன் 9 | அசோக் செல்வன் ஜோடியான நிமிஷா சஜயன் |
தமிழ் சினிமாவில் 90களில் புகழ்பெற்ற முன்னணி நடிகைகளுள் முக்கியமானவர் நடிகை மீனா. தனது அழகிய கண்களால் ரசிகர்களை கவர்ந்த மீனா 'அன்புள்ள ரஜினிகாந்த்' படத்தில் குழந்தை நட்சத்திரமாக ரஜினியுடன் நடித்து சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினார். பின்னாளில் எஜமான், வீரா, முத்து படங்களில் ரஜினிக்கே ஜோடியாக நடித்து அனைவரின் பாராட்டையும் பெற்றார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நான்கு மொழிகளிலும் நடித்து புகழ்பெற்றுள்ளார். நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது ரஜினியுடன் இணைந்து 'அண்ணாத்த' படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் நடிகை மீனா, தனது பிறந்தநாளை பார்டி வைத்து கொண்டாடி உள்ளார். இதற்காக அளிக்கப்பட்ட விருந்தில் நடிகைகள் சினேகா, கனிகா, ஸ்ரீதேவி விஜயகுமார் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர். மீனாவின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.