குட் பேட் அக்லி : ஓஜி சம்பவம் பாடல் வெளியானது | ஜனநாயகன் படம் குறித்து மமிதா பைஜூ கொடுத்த அப்டேட் | இயக்குனர் ஷங்கரின் மகன் அர்ஜித்தை ஹீரோவாக்கும் பிரபுதேவா | ஏஸ் படத்தின் உருகுது உருகுது... முதல் பாடல் வெளியானது | சிம்பொனி இசை: பிரதமர் மோடியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற இளையராஜா | 'வாகா' நடிகை ரன்யா ராவ் வழக்கில் திடீர் திருப்பம் | 'லாக்டவுன்' படம் 'லாக்' ஆகி விட்டதா ? | திட்டமிட்டபடி படப்பிடிப்பை முடிக்கும் லோகேஷ் கனகராஜ் | மீண்டும் ஹீரோவான 'பன்னீர் புஷ்பங்கள் ' சுரேஷ் | நயன்தாரா படத்தை ஓடிடியில் வெளியிடுவது ஏன்? : இயக்குனர் விளக்கம் |
முன்னனி மலையாள நடிகை பார்வதி நாயர். தற்போது சென்னையில் தங்கி இருந்து தமிழ் படங்களில் நடித்து வருகிறார். தமிழில் உத்தம வில்லன், மாலை நேரத்து மயக்கம், எங்கிட்ட மோதாதே, நிமிர், என்னை அறிந்தால், கோடிட்ட இடங்களை நிரப்புக உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான 'கோட்' படத்திலும் நடித்தார்.
கடந்த ஆண்டு தனது உதவியாளர் சுபாஷ் தனது வீட்டில் திருடியதாக பார்வதி நாயர் போலீசில் புகார் கொடுத்தார். பார்வதி நாயர் குறித்து பல பரபரப்பு தகல்களை உதவியாளர் சுபாஷ் வெளியிட்டார். இந்த விஷயங்கள் போலீஸ் விசாரணையில் உள்ளது.
இந்நிலையில், நடிகை பார்வதி நாயர் தனது வழக்கறிஞர் மூலம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது : கடந்த 2022ம் ஆண்டு என்னுடைய வீட்டில் இருந்த 18 லட்சம் ரூபாய் மதிப்புடைய பொருள்கள் திருட்டு போன வழக்கில் எனக்கு உதவியாளராக இருந்த சுபாஷ், உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. அப்போது புகாரை திரும்ப பெறும்படி சுபாஷ் எனக்கு மிரட்டல் விடுத்ததோடு எனக்கு எதிராக காவல் நிலையத்திலும் பொய்யான புகார் அளித்தார். தொடர்ந்து என்னுடைய தனிப்பட்ட வெளிவராத புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டும், பெயரை அவமதிக்கும் வகையில் பல பொய் செய்திகளை வெளியிட்டும் வருகிறார்.
இதுதொடர்பாக வழக்கில் கைது செய்யப்பட்டு எழும்பூர் நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதேபோல் சுபாஷ் மீது தொடரப்பட்ட அவதூறு வழக்கில், சுபாஷ் என்னை பற்றி பேச தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றமும் கடந்த 2023ம் ஆண்டு உத்தரவிட்டது. ஆனாலும் நீதிமன்ற உத்தரவுகளை மதிக்காமல் தொடர்ந்து சுபாஷ் என்னை பற்றி, அவதூறான, பெய்யான தகவல்களை சமூக ஊடகங்களுக்கு வழங்கி வருகிறார்.
தொடர்ந்து என்னுடைய திரைப்படங்கள் வெளிவரும் போதெல்லாம் இவ்வாறு சுபாஷ் தரப்பால் மிரட்டப்பட்டு மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன். சுபாஷ் மீதான புகாரை திரும்ப பெற்று 2 கோடி ரூபாய் வழங்க வேண்டும் என்று தொடர்ந்து சுபாஷ் தரப்பினரால் மிரட்டல் வந்துள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் சுபாஷ் அளித்த புகாரில் என் மீது வழக்குப் பதிவும் செய்யப்பட்டுள்ளது. எனவே, சட்டத்தையும், சமூக ஊடகங்களையும் தவறாக பயன்படுத்தி என்னுடைய பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் என்னிடம் உதவியாளராக இருந்த சுபாஷ் செய்து வருகிறார்.
நான் சினிமாவில் நடிக்க சென்னையில் தனியாக வசிக்கிறேன். நான் எந்த தவறும் செய்யவில்லை. சமூக வலைத்தளத்தில் என்மீது தவறான குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகின்றன. அவதூறுகளால் ஆபத்தில் இருக்கிறேன். வழக்கு கோர்ட்டில் உள்ளது. நீதி வெல்லும் என்று நம்புகிறேன்”.
இவ்வாறு அவர் அறிக்கையில் கூறியுள்ளார்.