Advertisement

சிறப்புச்செய்திகள்

ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பான் இந்திய படங்களால் 2022 பொங்கல் தமிழ்ப் படங்களுக்கு புதிய சிக்கல்?

31 ஆக, 2021 - 10:36 IST
எழுத்தின் அளவு:
Pongal-releasing-Tamil-movies-are-trouble-due-to-Pan-Indian-films

தமிழ் சினிமாவிற்கு புதிது புதிதாக எங்கிருந்தோவெல்லாம் சிக்கல்கள் வந்து கொண்டிருக்கின்றன. ஒரு பக்கம் ஓடிடி தளங்களில் நேரடி வெளியீடு, மறுபக்கம் முன்னணி டிவிக்களில் நேரடி வெளியீடு என புதிய படங்களை தியேட்டர்கள் பக்கம் வரவிடாமல் கொண்டு போய்க் கொண்டிருக்கிறார்கள்.

சரி, தீபாவளி, கிறிஸ்துமஸ், பொங்கல் ஆகிய விடுமுறை நாட்களில் சில முக்கிய படங்களை வெளியிட்டு வசூலைப் பார்க்கலாம் என்றால் அதற்கும் புது சிக்கல் ஒன்று வருகிறது. இப்போதைக்கு தீபாவளிக்கு ரஜினிகாந்த் நடித்துள்ள 'அண்ணாத்த' படம் மட்டும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதே தினத்தில் அஜித் நடித்துள்ள 'வலிமை' வந்தால் இரண்டு படங்களில் எதைப் பிடிப்பது என்ற போட்டி இருக்கும்.

அடுத்து கிறிஸ்துமஸ் விடுமுறை நாட்களில் படங்களை வெளியிடலாம் என்றால் அப்போது தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட 5 மொழிகளில் தயாராகி வரும் அல்லு அர்ஜுன் நடிக்கும் 'புஷ்பா' படத்தை வெளியிட முடிவு செய்துள்ளார்களாம்.

அதற்கடுத்து 2022 பொங்கலுக்கு படங்களை வெளியிடலாம் என்று பார்த்தால் பிரபாஸ், பூஜா ஹெக்டே நடிக்கும் 'ராதே ஷ்யாம்' படத்தை வெளியிட நேற்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார்கள். அதற்கு ஒரு வாரம் முன்னதாகவே ராஜமவுலி இயக்கத்தில் உருவாகி வரும் 'ஆர்ஆர்ஆர்' படத்தை வெளியிடலாமா என திட்டமிட்டு வருகிறார்களாம். அப்படி இந்த இரண்டு படங்களும் வெளிவந்தால் விஜய் நடித்து வரும் 'பீஸ்ட்' படம் பொங்கலுக்கு எப்படி வெளியாகும் என்று தெரியவில்லை.

சரி, 2022 தமிழ்ப் புத்தாண்டுக்கு சில பெரிய படங்களை வெளியிடலாம் என்று பார்த்தால் அன்றைய தினம் 'கேஜிஎப் 2' படம் வெளியாக உள்ளது. இப்படி அடுத்தடுத்து பண்டிகை நாட்களில் தமிழைத் தவிர வேற்று மொழிகளில் தயாராகியுள்ள 'பான்-இந்தியா' படங்கள் அவர்களது வெளியீட்டை திட்டமிட்டு முன்கூட்டியே அறிவித்து வருகிறார்கள்.

இவற்றோது மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் 'பொன்னியின் செல்வன்' படம் அடுத்த வருடம் எப்போது வெளிவர உள்ளது என்பதும் கேள்வியை எழுப்புகிறது. இப்படி அடுத்த மொழி பிரம்மாண்ட வெளியீடுகளாலும் தமிழ் சினிமா புதிய சோதனையை சந்திக்கத் தயாராகி வருகிறது.

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
டப்பிங் தான் கஷ்டம் - லாஸ்லியாடப்பிங் தான் கஷ்டம் - லாஸ்லியா கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடிய காஜல் அகர்வால் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடிய காஜல் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

31 ஆக, 2021 - 11:47 Report Abuse
அப்பாவி குப்பை தமிழ் படங்களுக்கு இது எவ்வளவோ பரவாயில்லை
Rate this:
S Ramkumar - Tiruvarur,இந்தியா
31 ஆக, 2021 - 11:22 Report Abuse
S Ramkumar விஜய் படத்தை எவ்வாறு வெளியிடுவது என்றுதான் கவலை
Rate this:
S Ramkumar - Tiruvarur,இந்தியா
31 ஆக, 2021 - 11:21 Report Abuse
S Ramkumar vijay
Rate this:
vijay - coimbatore,இந்தியா
31 ஆக, 2021 - 10:45 Report Abuse
vijay எத்தனை நாளைக்குத்தான் அரைச்ச மாவையே மாஸ் ஹீரோ படங்களையே ஒரே மாதிரி டுமீல் டுமீளன் புராணம் பாடும் மூஞ்சிகளையே பார்ப்பது? புது முகங்களையும், புது கதைக்களங்களையும் பார்க்கலாம்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in