உண்மை கதையில் விக்ரம் பிரபு | மீண்டும் தள்ளிப் போகிறதா லவ் இன்சூரன்ஸ் கம்பெனி? | காட்டேஜ் 'பெட்' சொல்லும் கதை | பெரும் தொகைக்கு விற்கப்பட்ட 'த்ரிஷ்யம் 3' | மதுபாலாவின் ‛சின்ன சின்ன ஆசை' | பிளாஷ்பேக் : இரண்டு காட்சிகளை வாங்கி இரண்டு படங்கள் தயாரித்த ஏவிஎம் | பிளாஷ்பேக் : அந்த காலத்திலேயே கலக்கிய 'டவுன் பஸ்' | தினமும் எம்ஜிஆரை வேண்டிக் கொண்டு நடித்தேன் : கார்த்தி | ரஜினி மாமனாராக நடிக்க வேண்டியது : திண்டுக்கல் லியோனி சொன்ன புது தகவல் | 25 வருடங்களுக்கு முன்பே ஐஸ்வர்யா ராய் ஜோடியாக நடிக்கும் வாய்ப்பை மிஸ் பண்ணிய பார்த்திபன் |

ஜான்பால், ஷாம் சூர்யா இணைந்து இயக்கியுள்ள பிரண்ட்ஷிப் படத்தில் கதை நாயகியாக பிக்பாஸ் பிரபலம் லாஸ்லியா நடிக்க, அர்ஜுன் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், சதீஷ், சக்திவேல் முருகன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
படம் குறித்து லாஸ்லியா அளித்த பேட்டி: நான் தமிழ் படங்களை பார்த்து தான் வளர்ந்தேன். சினிமாவுக்கு வந்த பின் தான் மற்ற மொழிப்படங்களை பார்த்தேன். நான் நடித்து வெளிவரும் முதல் தமிழ் படம் இது. ஆண், பெண் இடையே உள்ள நட்பை பற்றி இப்படம் பேசும். நடிக்கவே நான் இப்போது தான் வந்துள்ளேன். கற்று வருகிறேன். நடிப்பதை காட்டிலும் டப்பிங் பேசுவது கடினமாக இருந்தது. கல்லுாரியில் நடக்கும் அரசியல் கலந்த களத்தில் படம் உருவாகியுள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தியில் வெளியாகிறது. 2021 புதுவசந்தம் படம் போல் இருக்கும். ஹர்பஜன்சிங் ரஜினி ரசிகராக நடித்துள்ளார். அவருடன் நடித்தது மறக்க முடியாதது. என்றார்.
இயக்குனர்கள் கூறுகையில், ‛முதல்வன், ஜென்டில்மேன் படத்திற்கு பின் ஒரு உணர்வு இப்படத்தில் தான் ஏற்பட்டது என அர்ஜுன் கூறியது மறக்க முடியாது. ஹர்பஜன் சிங் கோபக்காரராக இருப்பார் என நினைத்தேன். ஆனால் ரொம்ப ஜாலியான, நடிப்பில் அக்கறை கொண்ட மனிதர். அவருடன் மீண்டும் கூட்டணி அமையும்' என்றனர்.