விஜய் சேதுபதியின் தங்கை கதாபாத்திரம்: நடிகை ரோஷினி நெகிழ்ச்சி | கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் | சம்பளம் உயர்த்தியதால் ‛யுடர்ன்' போடும் தயாரிப்பாளர்கள் | வில்லி கிடைத்தால் சொல்லியடிப்பேன்: 'தில்' காட்டும் நடிகை திவ்யா | நிழல் உலகில் நனவான தச்சனியின் கனவு | பிளாஷ்பேக்: இளையராஜா, கண்ணதாசன், எஸ் பி பி மூவரையும் முதன் முதலில் இணைத்த “பாலூட்டி வளர்த்த கிளி” | 75 வயதில் பிளஸ் டூ தேர்வு எழுத தயாரான மலையாள நடிகை | 20 வருடமாக நானும் ஹனிரோஸும் இப்போதும் பேச்சுலர்ஸ் தான் : உருகும் மலையாள நடிகர் |
கன்னடத்தில் வெளியான கேஜிஎப் படங்களின் இரண்டு பாகங்களை இயக்கியதன் மூலம் தென்னிந்திய அளவில் மிகப்பெரிய இயக்குனர்களின் பட்டியலில் இடம் பிடித்து விட்டார் இயக்குனர் பிரசாந்த் நீல். அது மட்டுமல்ல கடந்த வருடம் தெலுங்கில் பிரபாஸை வைத்து அவர் இயக்கிய சலார் திரைப்படமும் வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாக்கும் வேலைகள் நடந்து கொண்டிருக்க, இன்னொரு பக்கம் ஜூனியர் என்டிஆர் நடிக்கும் படத்தையும் பிரசாந்த் நீல் இயக்க இருக்கிறார் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த படத்திற்கான பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
சலார் படத்தில் கதாநாயகியாக நடிகை ஸ்ருதிஹாசன் நடித்திருந்தார். தற்போது ஜூனியர் என்டிஆர், பிரசாந்த் நீல் கூட்டணியில் உருவாகும் படத்திலும் ஸ்ருதிஹாசன் இடம் பெறுகிறார் என்கிற ஒரு தகவல் வெளியாகி உள்ளது. ஆதனால் இந்த படத்தில் கதாநாயகியாக அல்ல, ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆடுகிறாராம் ஸ்ருதிஹாசன். சலார் படத்தில் தன்னை கதாநாயகியாக நடிக்க வைத்த அந்த நட்புக்காக இந்த படத்தில் ஒரு பாடலுக்கு ஆட அவர் சம்மதித்து உள்ளாராம். இந்த படத்தில் கதாநாயகியாக ருக்மணி வசந்த் நடிக்கிறார் என்று ஏற்கனவே தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.