லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
அஜித் நடிப்பில் இந்தாண்டு பிப்ரவரி மாதம் விடாமுயற்சி, இந்த மாதம் குட் பேட் அக்லி என இதுவரை இல்லாத அதிசயமாக ஒரே வருடத்தில் அடுத்தடுத்து இரண்டு படங்கள் வெளியாகின. இதில் குட் பேட் அக்லி திரைப்படம் ஓரளவு வசூல் ரீதியாக வெற்றி பெற்று இன்னும் ஓடிக்கொண்டிருக்கிறது. அதே சமயம் அஜித் வழக்கம் போல தனது கார் ரேஸ் பயணங்களில் தொடர்ந்து ஆர்வம் காட்டி வருகிறார். இவற்றை தவிர பெரிதாக பொது நிகழ்வுகளில் கலந்து கொள்ளாத அஜித் நேற்று திடீரென சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை, ஐதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்ற கிரிக்கெட் போட்டியை தனது குடும்பத்தினருடன் கண்டுகளித்திருக்கிறார். இது குறித்த புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகின்றன.
நேற்றுமுன்தினம் தான் அஜித் ஷாலினியின் 25வது திருமண நாள் நிகழ்வு என்பதால் அந்த உற்சாகத்துடன் தனது மனைவி குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு இந்த கிரிக்கெட் போட்டியை நேரில் ரசிக்க அஜித் வந்துள்ளார் என்றே தெரிகிறது. இதே போட்டியை நேரில் பார்த்த சிவகார்த்திகேயன், அஜித்தை சந்தித்து தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டதுடன் அஜித்துடன் அமர்ந்து கிரிகெட் போட்டியை கண்டு ரசித்தார். எப்போதும் நரைத்த தலைமுடியுடனேயே வெளி இடங்களுக்கு வந்து செல்லும் அஜித் நேற்று தலைமுடிக்கு டை அடித்து இருந்தார் என்பது இன்னொரு ஆச்சர்யம்.