தீபாவளிக்கு 'கருப்பு' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகிறது! | ஹாட்ரிக் அடிக்கிறாரா பிரதீப் ரங்கநாதன் | ராஜமவுலி தயாரிப்பில் பஹத் பாசில் புதிய பட படப்பிடிப்பு துவங்கியது! | இசைத்துறையில் சாதிக்க என்ன செய்ய வேண்டும்? அழகாக சொல்கிறார் அனுராதா ஸ்ரீராம் | 'காந்தாரா சாப்டர் 1' ஹிட்: ஆன்மிக பயணம் செல்லும் ரிஷப் ஷெட்டி | ரஜினி பிறந்தநாளில் பிரமாண்டமாக ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை! | இயக்குனர் கென் கருணாஸ் உடன் இணைந்த ஜி.வி. பிரகாஷ்! | 'பள்ளிச்சட்டம்பி' படப்பிடிப்பை நிறைவு செய்த கயாடு லோஹர் | நள்ளிரவு பூஜை நடத்திய பூ நடிகை | துக்கடா வேடங்களை ஒதுக்கும் புயல் காமெடியன் |
கடந்த பத்து வருடங்களாக தமிழ் சினிமாவின் புதிய டிரண்ட் 'சிக்ஸ்பேக்'. தற்போது இது குறைந்து விட்டாலும் மழை விட்டாலும், தூவானம் விடாது என்பது மாதிரி நடந்து வருகிறது. ஹாலிவுட் ஆக்ஷன் ஹீரோக்களுக்கு சிக்ஸ்பேக் என்பது தனி தகுதியாக இருந்தது. அது அப்படியே பாலிவுட்டுக்கும் வந்தது. பாலிவுட் நடிகர்கள் கதைக்கு தேவையே இல்லை என்றாலும் ஒரு முறையாது தங்களது சிக்ஸ் பேக் உடலை காட்டுவார்கள். குறைந்த பட்சம் திடீரென சட்டையை கழற்றிப்போட்டு சண்டை போடுவார்கள்.
இது அப்படியே தமிழ் சினிமாவிற்கு வந்தது. சில வில்லன் நடிகர்கள் சிக்ஸ் பாடி காட்டியபோதும் ஹீரோக்கள் அதை காட்டவில்லை. திடீரென இது ஹீரோக்கள் பக்கம் திரும்பியது, தனுஷ், சூர்யா, விஷால், ஆர்யா, ஆதி, டான்சிங் ரோஸ், அருண் விஜய், பரத், விக்ரம், விஷ்ணு விஷால் ஆகியோர் சிக்ஸ் பேக் வைத்தார்கள். காமெடியானாக இருந்த சூரியும் சிக்ஸ் பேக் காட்டினார்.
சமீபத்தில் ஒரு புதிய சர்ச்சையை கிளப்பினார் நடிகர் சிவகுமார். அவர் தன் மகன் நடித்த 'ரெட்ரோ 'படத்தின் விழாவில் பேசும்போது "தமிழ் சினிமாவில் முதன் முதலாக சிக்ஸ்பேக் வைத்தது சூர்யாதான்" என்று மகன் புகழ்பாடி விட்டார். அவ்வளவுதான் பல நடிகர்களின் ரசிகர்கள் கொதித்தெழுந்து எங்கள் ஹீரோக்கள்தான் முதலில் சிக்ஸ்பேக் வைத்தார்கள் என்று சண்டையிட ஆரம்பித்து விட்டார்கள்.
இந்த நிலையில் இது குறித்து விஷால் வெளியிட்டுள்ள ஒரு வீடியோ பதிவில் “முதன் முதலில் 'சிக்ஸ் பேக்' வைத்தவர் தனுஷ் தான். வெற்றிமாறன் இயக்கிய 'பொல்லாதவன்' படத்தில் அவர் 'சிக்ஸ் பேக்' உடற்கட்டில் தோன்றுவார். அதன் பிறகு 'சத்யம்' படத்தில் நான் 'சிக்ஸ் பேக்' வைத்தேன். அதன்பிறகு 'மதகஜராஜா' படத்திலும் அந்த தோற்றத்தில் வந்தேன். ஒருவேளை அவர் (சிவகுமார்)அதை மறந்திருக்கலாம்'' என்று குறிப்பிட்டுள்ளார்.
இது இப்படியிருக்க பில்லா படத்திற்காக நயன்தாரா சிக்ஸ்பேக் வைத்ததும், சிம்பு ஒரு படத்தில் சிக்ஸ்பேக் மேக் அப் போட்டு நடித்ததும் தனி கதை.