ஏப்., 30ல் கிஸ் முதல் பாடல் வெளியீடு | ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் பாணியில் உருவாகியுள்ள நரிவேட்டை | தொடரும் படம் பார்க்க வந்த ரசிகர்களிடம் வீடியோ காலில் உரையாடிய மோகன்லால் | ஐஸ்வர்யா ராய் என்னை சிறுவனாக நினைத்ததில்லை : ரன்பீர் கபூர் | ஜூனியர் என்டிஆர், பிரசாந்த் நீல் படத்தில் நட்புக்காக நடனமாடும் ஸ்ருதிஹாசன் | சேப்பாக்கத்தில் சென்னை மேட்ச் பார்த்து ரசித்த அஜித், சிவகார்த்திகேயன் | தமிழ் சினிமாவில் சிக்ஸ்பேக் சண்டை | பிளாஷ்பேக்: இளையராஜா முடிவு செய்த கிளைமாக்ஸ் | பிளாஷ்பேக் : தமிழில் வெளியான முதல் கன்னடப் படம் | சசிகுமார் ஜோடியாக நடித்தது ஏன்? : சிம்ரன் விளக்கம் |
'பயணங்கள் முடிவதில்லை' படத்தின் வெற்றியை தொடர்ந்து ஆர்.சுந்தர்ராஜன், கோவை தம்பி காமினேஷனில் உருவான படம் 'நான் பாடும் பாடல்'. சிவகுமார், அம்பிகா, மோகன், பாண்டியன், இளவரசி, சரத்பாபு, சுரேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள்.
படத்திற்கு இளையராஜா இசை அமைத்திருந்தார், தேவன் கோவில் தீபம் ஒன்று, பாடவா என் பாடலை, பாடும் வானம்பாடி, சீர் கொண்டு வா போன்ற இனிமையான பாடல்கள் இடம்பெற்ற படம்.
இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை நெருங்கியபோது படத்தின் கிளைமாக்ஸ் குறித்து இயக்குனர் ஆர்.சுந்தர்ராஜனுக்கு குழப்பம் ஏற்பட்டது. கதைப்படி பாடகர் மோகனை காதலித்து திருமணம் செய்த அம்பிகா, திருமணமான சில நாட்களிலேயே மோகன் விபத்தில் இறந்து விட கணவர் வீட்டிலேயே வாழ்கிறார், அந்த வீட்டிற்கு கதை எழுத வருகிறார் சிவகுமார். ஒரு கட்டத்தில் சிவகுமாருக்கு, அம்பிகா மீது அன்பு அதிகமாகிறது. பழைய கணவனை மறந்து சிவகுமாரோடு வாழ்வதா, அல்லது மோகன் நினைவாகவே வாழ்ந்து விடுவதா? என்று தடுமாறுகிறார் அம்பிகா. இந்த தடுமாற்றம் இயக்குனருக்கும் ஏற்பட்டது.
அம்பிகா, சிவகுமாரை கணவராக ஏற்றுக் கொள்வது போன்று ஒரு கிளைமாக்ஸையும், அவரை நிராகரித்து மோகன் நினைவிலேயே வாழ முடிவெடுப்பதாக ஒரு கிளைமாச்ஸையும் படமாக்கி அதை இளையராஜாவிடம் கொடுத்து உங்களுக்கு பிடித்த கிளைமாக்ஸை நீங்களே தேர்வு செய்து வைத்து விடுங்கள் என்று கூறினார் ஆர்.சுந்தர்ராஜன்.
இளையராஜா அம்பிகா மோகன் நினைவோடு வாழும் கிளைமாக்ஸை தேர்ந்தெடுத்து அதற்கு நெகிழ்ச்சியான பின்னணி இசையும் அமைத்தார். மக்களும் இந்த கிளைமாக்ஸை ஏற்றுக் கொண்டதால் படம் 100 நாட்கள் ஓடி வெற்றி கண்டது.